இஸ்லாமிய உடன்பிறப்புகளுடன் நமது நிலை
If you are a Hindu religious leader, please sign this statement. We will be taking out full-page ads in Indian newspapers displaying the statement and the signatories.

This effort is being coordinated by Hindus for Human Rights. If you have any questions, please write to info@hindusforhumanrights.org

English: https://forms.gle/GF7wF7cZDmwcLxbr8

हिंदी: https://forms.gle/dXaH4wDbvqUWse126

తెలుగు: https://forms.gle/uQUcgeUnrqqYLGfb9

ಕನ್ನಡ: https://forms.gle/ntNgS4NW8yMzrWPJ6

മലയാളം: https://forms.gle/ZFWRRoX1XS1yTAi19
Sign in to Google to save your progress. Learn more
இஸ்லாமிய உடன்பிறப்புகளுடன் நமது நிலை
இந்துக்கள் என்ற முறையில் நாம் எல்லா உயிர்களிடத்தும் தெய்வீகம் சமமாக வாழ்கிறது என்பதை நிலைநிறுத்த அழைக்கப்படுகிறோம். இந்த நிலைநிறுத்தலுக்கு நாம் அனைத்து உயிரினங்களின் கண்ணியத்தையும் உறுதிப்படுத்த வேண்டும். மேலும், அஹிம்சை, கருணை ஆகிய நற்பண்புகளையும் ஏற்று அதன்படி நடப்பது அவசியம்.

இந்தக் கடிதத்தை எழுதும் இத்தருணத்தில் இஸ்லாமிய உடன்பிறப்புகளுக்கு எதிராக நமது மதநம்பிக்கை என்கிற பெயரில் நடத்தப்படும் வன்முறைகள் அதிகரித்து வருவதை நாம் வருத்தத்துடன் காண்கிறோம்.

மிகப் பழமையான வரலாறுகளைக் கொண்ட பல்வேறு இந்து மரபுகளின் பிரதிநிதிகள் என்கிற வகையில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இந்து தலைவர்கள் ஹிந்துத்வாவை முழுவதுமாக ஏற்றுக்கொள்வதைக் கண்டு நாங்கள் மிகவும் வியக்கிறோம். இந்துத்வா என்பது ஒரு நூற்றாண்டு பழமையான அரசியல் சித்தாந்தம். இதன்படி இஸ்லாமியர்களையும் மற்ற பல மத நம்பிக்கைகளை ஏற்று நடப்பவர்களையும் முற்றிலும் அந்நியர்கள் என்றும், அவர்கள் இந்தியக் குடியுரிமையின் முழு நன்மைகளுக்குத் தகுதியற்றவர்கள் என்றும் இந்துத்வா கூறுகிறது. 2021 திசம்பர் மாதத்தில் லட்சக்கணக்கான இஸ்லாமியர்களின் இனப்படுகொலை வன்முறைக்கு அழைப்பு விடுக்கும் காவி உடை அணிந்த சாதுக்கள், சாத்விக்கள், மற்றும் சுவாமிகளின் படங்களும் காணொலிகளும் பயங்கரமானவை. இது நாம் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஹரித்வார் நகரில் ‘தர்ம பாராளுமன்றம்’ என்று கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்ட செயலியின் மூலம் இஸ்லாமியப் பெண்கள் “ஏலத்தில்” விடப்படுவதை நாம் பார்த்தோம். மேலும், கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிந்த இஸ்லாமியப் பெண்களுக்கு சமகல்வி உரிமை மறுக்கப்படுவதையும் நாம் காண்கிறோம்.

உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் நமது கூட்டுமௌனத்தை விடுத்து நமது பாரம்பரியத்தின் ஆழமான போதனைகளை எதிர்க்கும் இந்த வெறுப்புக்கு எதிராகக் குரல்கொடுக்க வேண்டிய நேரம் கடந்துவிட்டது.

இந்துக்கள் மற்ற நாடுகளில் தாக்கப்படும்போது நாம் ஏன் இந்திய இஸ்லாமியர்களைப் பற்றிப் பேசுகிறோம் என்று சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். எங்கள் பதில் இதற்கு மிகத் தெளிவாக உள்ளது. தெற்காசியா முழுவதும் உள்ள மத வன்முறை சுழற்சிகளை முறியடிப்பதற்கான ஒரே வழி இதுதான். அதாவது, செழித்து கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமைக்காக நாம் போராடுவதுதான். பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை இந்தியாவில் உள்ள இஸ்லாமியர் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை என்றும் நியாயப்படுத்தாது.

இந்தக் கடிதத்தில் கையெழுத்திடுவதன் மூலம் நாங்கள்:

- நமது சமூகத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான பேச்சுகள் மற்றும் செயல்கள் எழும்போதெல்லாம்
- நமக்கு அண்மையில் உள்ள இஸ்லாமியர்களுடனும், தலைவர்களுடனும், நிறுவனங்களுடனும் உறவுகளை மேம்படுத்துவோம்.
- மத தேசியவாதம், சாதிவெறி, மற்றும் பிற பாரம்பரியங்களைச் சேர்ந்த நமது சகோதர சகோதரிகளின் மீதான காழ்ப்புணர்ச்சி போன்ற கருத்துகளை எதிர்த்து நமது மரபுகளின் மையத்தில் உள்ள மத சுதந்திரம் மற்றும் சமூக நீதி போதனைகளை ஏற்போம்.

என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்.

ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி
பெயர் / Name *
அமைப்பு/கோவில் / Organization/Temple *
இடம் / Location *
நீங்கள் ஒரு நிறுவனத்தின் சார்பாக கையொப்பமிடுகிறீர்களா அல்லது தனி நபராக கையொப்பமிடுகிறீர்களா? / Are you signing on behalf of an organization or as an individual? *
ஈமெயில் / Email *
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy