8 மணித்தேர்வு - 98 (9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 10-11) 
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
பெயர்: *
மாவட்டம்: *
1.  ........................ நாட்டைச் சேர்ந்த பொறியாளர்
ஜேம்ஸ் வாட் நிலையாகப் பொருத்தப்பட்ட நீராவி இயந்திரத்தினைச் சுழலும் நீராவி இயந்திரமாக மாற்றியமைத்தார். இது குறைவான எரிபொருளைப் பயன்படுத்தியது.
1 point
Clear selection
2. ............. இல் ஜான் கே கண்டுபிடித்த கைகளால் இயக்கப்படும் ‘flying shuttle’ எனப்படும் பறக்கும் நாடா நூற்பின் வேகத்தை அதிகரித்தது.
1 point
Clear selection
3. ................ இல் ஜேம்ஸ் ஹார்கிரீவ்ஸ் இயந்திர நூற்புக் கருவியைக் கண்டுபிடித்தார். இது ஒரே சமயத்தில் எட்டு நூல்களை ஒன்றாகப் பின்னி நூற்றது.
1 point
Clear selection
4. ........... ஆண்டு ரிச்சர்ட் ஆர்க்ரைட் ’நீர்ச்சட்டகத்தைக்’ (water frame) கண்டுபிடித்தார். இந்த நூற்புச் சட்டகம் மனித ஆற்றலுக்கு மாற்றாக நீர் ஆற்றலைப் பயன்படுத்துவதாகும்.
1 point
Clear selection
5. ............. இல் சாமுவேல் கிராம்ப்டன் இயந்திர நூற்புக்கருவியையும் நீர்ச்சட்டகத்தையும்
இணைத்துச் ’ஸ்பின்னிங் மியூல்’ என்ற நூற்பு
இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.
1 point
Clear selection
6. ...................... இல் எலி விட்னி என்பவர் பருத்தியிலிருந்து கொட்டையைத் தனியாகப் பிரித்தெடுக்கும் காட்டன் ஜின் எனப்படும் பஞ்சுக் கடைசல் கருவியைக் கண்டுபிடித்தார்.
1 point
Clear selection
7. .................. இல் ஹென்றி பெஸ்ஸிமர் எஃகு தயாரிக்க ஒரு விரைவான, சிக்கனமான முறையைக் கண்டுபிடித்தார்.
1 point
Clear selection
8. ஜேம்ஸ் வாட் மேம்படுத்திய நீராவி
இயந்திரம் மட்டுமல்லாமல் ஆர்க்ரைட் வரவாலும் ஆலை உற்பத்தி முறையாலும் நிலக்கரிக்கான தேவை அதிகரித்துக் கொண்டே இருந்தது.
1 point
Clear selection
9. ............ இல் சர் ஹம்ப்ரி டேவி எனும் கண்டுபிடிப்பாளரால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு விளக்கினால் வெடிவிபத்துகள் அபாயம் குறைந்தது.
1 point
Clear selection
10. இங்கிலாந்தில் 1750இல் 4.7 மில்லியன் டன்களாக இருந்த நிலக்கரி உற்பத்தி .......... இல் 250 மில்லியன் டன்களாக அதிகரித்தது.
1 point
Clear selection
11. முதல் ரயில்பாதை .......... இல் இங்கிலாந்து
நாட்டில் ஸ்டாக்டன், டார்லிங்டன் ஆகிய
நகரங்களுக்கு இடையே அமைக்கப்பட்டது.
அடுத்த நாற்பதாண்டுகளில் 15,000 மைல் தூரம்
இருப்புப்பாதைகளால் இணைக்கப்பட்டன.
1 point
Clear selection
12. அமெரிக்காவின் ராபர்ட் ஃபுல்டன் என்பவர்
................. இல் கிளர்மோண்ட் என்ற நீராவிப் படகினைக் கண்டுபிடித்தார். இது நியூயார்க், ஆல்பனி ஆகிய நகரங்களுக்கு இடையே 150 மைல் தொலைவுக்கு இயக்கப்பட்டது.
1 point
Clear selection
13. ........... ஆம் ஆண்டில் மான்செஸ்டர், லிவர்பூல் ஆகிய நகரங்களுக்கு இடையிலான 40 மைல் தூரம் ஒன்றரை மணிநேரத்தில் கடக்கமுடிந்தது.
1 point
Clear selection
14. நிலக்கரிச் சுரங்கத்தொழில் நிலைமை குறித்து .......... இல் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஓர் அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கை சுரங்கங்கள் அறிக்கை என அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
15. ................ இல் இருபது இலட்சமாக இருந்த லண்டனின் மக்கள்தொகை நாற்பதாண்டுகளில் ஐம்பது இலட்சமாக உயர்ந்தது.
1 point
Clear selection
16. மான்செஸ்டர் நகரில் நிலவிய
குளிர்ச்சியான காலநிலை ஜவுளி உற்பத்திக்கு
உகந்த சூழ்நிலையை அளித்தது. மேலும் லிவர்பூல் துறைமுகம், லங்காஷையர் நிலக்கரிச் சுரங்கம் ஆகியனவற்றுக்கு அருகிலும் அது அமைந்து இருந்தது. இதனால் உலகின் ஜவுளி உற்பத்தித் தொழிலின் தலைநகரமாக மான்செஸ்டர் மாறியது. இது ஏராளமான மக்களை மான்செஸ்டர் நகரை
நோக்கி ஈர்த்தது.
1 point
Clear selection
17. ........... இல் 22,000 மக்கள் மட்டுமே வசித்த மந்தமான நகரமாகத்தான் மான்செஸ்டர்
இருந்தது. இதே நகரம் அடுத்த ஐம்பதாண்டுகளில் 1,80,000 மக்கள்தொகை கொண்டதாக வளர்ந்தது.
1 point
Clear selection
18. .................... இல் சீர்திருத்த மசோதா 
கொண்டுவரப்பட்டது. சொந்தமாகச் சொத்து
வைத்திருந்த நடுத்தர வர்க்கத்திற்கு மட்டுமே
அச்சட்டம் வாக்குரிமை அளித்தது.
1 point
Clear selection
19. பிரான்கோஸ் டி வெண்டல் என்பவர்
பிரிட்டிஷ் தொழில்நுட்பத்தை லொரைனுக்குக் கொண்டு வந்தார். அவரது குடும்பம் நிலக்கரிச் சுரங்கத்தில் நீராவி இயந்திரத்தையும், இரும்பைப் பிரித்தெடுப்பதில் துழாவும்
உலையையும் (puddling kiln) பிரான்சில் அறிமுகம் செய்தது.
1 point
Clear selection
20. .............. இல் பிரான்ஸ் நாட்டின் செயின்ட் இடியன் – ஆந்திரிஜியோக்ஸ் ஆகிய
நகரங்களிடையே முதல் பிரெஞ்சு ரயில்பாதை
திறக்கப்பட்டது.
1 point
Clear selection
21. பிரான்ஸ் நாட்டில் இன்றளவும் புகழ்பெற்ற வாகன நிறுவனங்களாகத் திகழும் இரு
நிறுவனங்கள் ............ இல் தொடங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. அர்மான் பியூகாட் நிறுவனம், முதல் கட்ட வாகனங்களை உற்பத்தி செய்தது.
1 point
Clear selection
22. ............ இல் லூயி ரெனால்ட் என்பவர் நான்கு
சக்கர வாகனத்தை உருவாக்கினார். தொடர்ந்து
சொசைட்டெ ரெனால்ட் ஃபெரெர்ஸ் (ரெனால்ட்
சகோதரர்கள் நிறுவனம்) தனது நிறுவனத்தின்
மூலம் அதிக எண்ணிக்கையில் வாகனங்களைத்
தயாரித்தார்.
1 point
Clear selection
23. 1806இல் பிரான்சில் வேளாண்மை
உற்பத்தியில் ஈடுபட்ட மக்கள்தொகை
65.1 விழுக்காடாக இருந்தது. 1896 இல் இது 42.5 விழுக்காடாகக் குறைந்தது. அதே காலகட்டத்தில் தொழில் துறையில்
வேலைவாய்ப்புகளின் பங்கு 20.4  விழுக்காட்டில் இருந்து 31.4 விழுக்காடாக
அதிகரித்தது.
1 point
Clear selection
24. ..................  டிசம்பரில் நியூரெம்பர்க், ஃபர்த் நகரங்களுக்கிடையே முதல் இருப்புப்பாதை அமைக்கப்பட்டது.
1 point
Clear selection
25. ......... அதிபர் ஆண்ட்ரூ ஜாக்சன், சிலேட்டரை ”அமெரிக்கத் தொழிற்புரட்சியின் தந்தை” என்று புகழ்ந்தார்.
1 point
Clear selection
26. 19ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா புதிய
தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் உருவாக்குவதில் முனைந்தது. ராபர்ட் ஃபுல்டன் என்பவர் ஹட்சன் நதியில் நீராவிப் படகுப் போக்குவரத்தினைத் தொடங்கினார். சாமுவேல் F.B. மோர்ஸ் தந்தியைக்
கண்டுபிடித்ததும், எலியாஸ் ஹோவே தையல்
இயந்திரத்தைக் கண்டுபிடித்ததும் அமெரிக்க
உள்நாட்டுப்போருக்கு (1860–1865) முன்னர்
நிகழ்ந்தவை ஆகும்.
1 point
Clear selection
27. .............. இல் எலியாஸ் ஹோவே என்ற
அமெரிக்கர் துணி தைக்கும் ‘தையல்
இயந்திரத்தை‘க்கண்டுபிடித்தார். துணிகளை
வெண்மையாக்குவது, சாயமிடுவது,
அச்சிடுவது போன்ற புதிய முறைகளின்
கண்டுபிடிப்புகளால் 19ஆம் நூற்றாண்டின்
முதல் பாதியில் பல்வேறு நிறங்களில்
துணிகளைத் தயாரிக்க முடிந்தது.
1 point
Clear selection
28. அமெரிக்காவின் பெரிய அளவிலான
முதல் கனரக எஃகு உற்பத்தி ஆண்ட்ரூ
கார்னேகி என்பவரால் தொடங்கப்பட்டது.
இரும்பு க்கா ன மூ ல ப்பொ ருட்களை
வழங்கிய சுரங்கங்கள், உற்பத்தி ஆலைகள், இறுதித் தயாரிப்பான இரும்புத்தகடுகளை உருவாக்கும் வெப்ப உலைகள், உற்பத்திப் பொருள்களை எடுத்துச்செல்லும்
இரயில்பாதைகள், கப்பல் போக்குவரத்து
என ஒவ்வொன்றையும் விலைக்கு வாங்கி,
எஃகு உற்பத்தியின் ஒவ்வொரு கட்டத்தையும்
தனது ஆதிக்கத்தின் கீழ்க்கொண்டுவந்தார்.
1 point
Clear selection
29. ஹே மார்க்கெட் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ........ ஆம் நாள் இன்றளவும் சர்வதேச தொழிலாளர் நாளாகக் (மே தினம்) கடைபிடிக்கப்படுகிறது.
1 point
Clear selection
30. டச்சுக்காரர் ...... ஆம் ஆண்டு மலாக்காவைக் கைப்பற்றி அங்கிருந்த போர்த்துகீசியக் குடியேற்றங்களை ஆக்கிரமிக்கும் பணியைத் தொடங்கினர்.
1 point
Clear selection
31. டச்சுக்காரருடன் ஏற்பட்ட போட்டியின் விளைவாக .......... இல் ஸ்டாம்போர்டு ராஃபில்ஸ் என்பவர் சிங்கப்பூரை ஆங்கிலேயரின் முக்கிய வணிக மையமாக உருவாக்கினார்.
1 point
Clear selection
32. ............... வாக்கில் சிங்கப்பூரும் மலாக்காவும் பினாங்கோடு இணைக்கப்பட்டு 
நீரிணைப்பகுதி குடியிருப்புகள் (Straits Settle-
ments) உருவாக்கப்பட்டன.
1 point
Clear selection
33. டச்சுக்காரர் ........... ஆம் ஆண்டிற்கு முன்னர்
ஜாவாவையும் சுமத்ராவையும் ஆக்கிரமித்தனர்.
1 point
Clear selection
34. ............. இல் கியூபாவுக்கு எதிரான போரில் ஸ்பெயினை அமெரிக்கா தோற்கடித்தது. அதன் விளைவாகப் பிலிப்பைன்ஸ் அமெரிக்காவின் காலனியானது.
1 point
Clear selection
35. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி 1910 வரை தொடர்ந்த நிர்வாகச் சீர்திருத்தங்கள் அந்நாட்டில் ஓரளவுக்குச் சுதந்திரமாக இயங்கும் ‘மியூங்’ என்று அழைக்கப்பட்ட நகரங்களில் மேற்கத்திய பாணியிலான நிர்வாக முறையை ஏற்படுத்தின.
1 point
Clear selection
36. 1881க்கும்....... க்கும் இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பிய சக்திகள் ஆப்பிரிக்காவின் மீது படையெடுத்து, கைப்பற்றிக் காலனிகளை ஏற்படுத்திய ஏகாதிபத்திய சகாப்தமானது ஆப்பிரிக்காவைப் பங்கிடுதல் அல்லது ஆப்பிரிக்கப் போட்டி என அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
37.......... இல் டிரான்ஸ்வாலில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டவுடன் இங்கிலாந்தைச் சேர்ந்த சுரங்கத்தொழில் வல்லுநர்கள் ஜோகன்னஸ்பர்க்கிலும் அதன் 
சுற்றுப்புறங்களிலும் பெரும் எண்ணிக்கையில்
குடியேறத் தொடங்கினர்.
1 point
Clear selection
38. 1907 இல் போயர் நாடுகளுக்கு முழுமையான பொறுப்பு அரசுரிமைகள் வழங்கப்பட்டன. சில வருடகால
விவாதங்களுக்குப் பின்னர் முடிவாக இந்நான்கு நாடுகளும் ஒன்றாக இணைவதற்கு
ஒப்புக்கொண்டதால் ................ இல் தென்னாப்பிரிக்கா எனும் நாடு உதயமானது.
1 point
Clear selection
39. கோல்டு கோஸ்டில் அமைந்துள்ள
கடற்கரைப் பகுதி அரசுகள் 1854இல் ஆங்கிலேயரின் காலனியானது. நைஜீரியாவின் கடற்கரைப் பகுதி அடிமைச் சந்தையாகப் பயன்படுத்தப்பட்டது. 1886இல் ராயல் நைஜர் கம்பெனி உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த நிறுவனம் ............... இல் ஆங்கிலேய அரசால்
எடுத்துக்கொள்ளப்பட்டது.
1 point
Clear selection
40. ............. ஆம் ஆண்டு வாஸ்கோடகாமா நன்னம்பிக்கை முனையைச் சுற்றிக்கொண்டு கோழிக்கோட்டை வந்தடைந்தார். 
1 point
Clear selection
41. இந்தியாவில் அடிமைமுறை ............... இல் ஒழிக்கப்பட்டுவிட்டதால் கம்பெனி ஒப்பந்தக்கூலி முறையை அறிமுகம்
செய்தது.
1 point
Clear selection
42.  கலோனஸ் என்ற லத்தீன் சொல்லின் பொருள் ……….
1 point
Clear selection
43.  பிரான்ஸிஸ் லைட் ……. பற்றி ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
1 point
Clear selection
44.  1896 இல் …… நாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டு மலாய் ஐக்கிய நாடுகள் உருவாக்கப்பட்டது.
1 point
Clear selection
45.  இந்தோ – சீனாவில் …… மட்டுமே பிரான்சின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியாகும்.
1 point
Clear selection
46.  இந்தியாவுடன் வணிக உறவை நிறுவிக் கொண்ட முதல் ஐரோப்பிய நாட்டினர்………..
1 point
Clear selection
47.  மூன்றில் ஒரு பகுதி ஒடிசா பகுதி மக்களை பலி கொண்ட பஞ்சம் ஏற்பட்ட காலம்?
1 point
Clear selection
48. முல்லை பெரியார் அணை கட்டி முடிக்கப்பட்ட ஆண்டு?
1 point
Clear selection
49. தாது வருடப் பஞ்சத்தில் இந்தியாவில் உயிர் இழந்தவர்கள் _____________
1 point
Clear selection
50. ஒப்பந்தக் கூலி முறை மூலம் சுமார் எத்தனை
இலட்சம் இந்தியர்கள் பல ஆங்கிலேயக்
குடியேற்றங்களுக்குப்  வேலை செய்ய அனுப்பி வைக்கப்பட்டனர்?
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy