கர்ம யோகம் பாடம் 03 - பகுதி 01
பாடம் :  3. நாம் உதவி செய்வது நமக்கே; உலகிற்கு அல்ல

பகுதி A : தத்துவம் - புராணம் - சடங்கு

கடமைகளைச் சரிவரச் செய்வது ஆன்மீக முன்னேற்றத்திற்கு எப்படி உதவுகிறது என்பதைக் காண்பதற்கு முன், கர்மம் என்பதற்கு இந்தியாவில் வழங்கப்படும். மற்றொரு கருத்தையும் சுருக்கமாக நான் உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். ஒவ்வொரு மதத்திலும் தத்துவம், புராணம், சடங்கு என்று மூன்று பகுதிகள் உள்ளன. எந்த மதத்திற்கும் தத்துவமே சாரமாக அமைந்துள்ளது. இந்தத் தத்துவத்தை ஏறக்குறைய கற்பனைப் பாத்திரங்களான மாமனிதர்களின் வாழ்க்கை, கதைகள், உவமைகள் போன்ற அற்புதமான விஷயங்கள் மூலம் விளக்கி விவரிப்பது புராணம். சடங்கு என்பது தத்துவக் கருத்துக்களுக்கு, எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் தெளிவான வடிவம் கொடுப்பது. உண்மையில் தத்துவத்தின் உருத்தோற்றமே சடங்கு.

இந்தச் சடங்கு தான் கர்மம். இவை ஒவ்வொரு மதத்திற்கும் இன்றியமையாதவை. ஏனென்றால் ஆன்மீகத்தில் மிகவும் முன்னேறாமல் நுட்பமான ஆன்மீக உண்மைகளைப் புரிந்துகொள்ள முடியாது. எதையும் புரிந்துகொள்ள முடியும் என்று நினைப்பது சுலபம். ஆனால் நடைமுறை அனுபவத்திலோ நுட்பமான கருத்துக்களைப் புரிந்துகொள்வது அவ்வளவு சுலபமானது அல்ல என்பது தான் உண்மை. எனவே சின்னங்கள் (symbols) சிறந்த உதவியாக அமைந்துள்ளன. அவற்றின் மூலம் எதையும் தெளிவுப்படுத்துகின்ற முறையை நாம் ஒதுக்கிவிட முடியாது. மிகப் பழங்காலத்திலிருந்தே எல்லாவித மதங்களும் சின்னங்களைப் பயன்படுத்தி வருகின்றன.

ஒருவகையில் சின்னங்களின் மூலம் தான் நாம் சிந்திக்கவே முடியும். சொற்கள் என்பவை சிந்தனையின் சின்னங்களே தவிர வேறல்ல. இன்னொரு வகையில் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றையும் ஒரு சின்னமாக நாம் கொள்ளலாம். இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே ஒரு சின்னம், அதன் பின்னாலுள்ள சாரம் இறைவன். இத்தகைய சின்னங்களின் உருவாக்கம் மனிதனின் வெறும் கண்டுபிடிப்பல்ல. ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த சிலர் ஒன்றாக அமர்ந்து தங்கள் மனத்துள் சிந்தித்து வெளிக்கொண்டு வந்தவையல்ல இவை. மதச் சின்னங்கள் இயல்பாகத் தோன்றி வளர்ந்தவை. இல்லையென்றால் ஏறக்குறைய எல்லோரின் மனத்திலும், குறிப்பிட்ட கருத்துக்கள் குறிப்பிட்ட சின்னங்களோடு மட்டுமே தொடர்புடையவையாக எப்படி இருக்கும்? சில சின்னங்கள் உலகம் முழுவதிலுமே வழக்கத்தில் இருக்கின்றன.

கிறிஸ்தவ மதத்துடனான தொடர்பிற்குப் பின்னர் தான் சிலுவை ஒரு சின்னமாக முதலில் கொள்ளப்பட்டது என்று உங்களுள் பலரும் நினைக்கலாம். ஆனால் உண்மையில் கிறிஸ்தவ மதம் தோன்றுவதற்கு முன்னால், மோசஸ் தோன்றுவதற்கு முன்னால், வேதங்களும் தோன்றுவதற்கு முன்னால், வரலாற்றுக் குறிப்புகள் தொடங்குவதற்கு முன்னால் சிலுவைச் சின்னம் இருந்தது. அஸ்டெக்(Aztecs) மற்றும் பினீசியர்களிடையே (Phoenicians) இந்தச் சின்னத்தை நாம் காண முடியும். ஒவ்வோர் இனத்தினரும் சிலுவைச் சின்னம் வைத்திருந்ததாகவே தோன்றுகிறது. சிலுவையில் அறையப்பட்ட ரட்சகர், அதாவது, சிலுவையில் அறையப்பட்ட ஒரு மனிதர்-இந்தச் சின்னமும் எல்லா நாடுகளிலும் அறியப்பட்ட ஒன்றாகவே தோன்றுகிறது.

இதுபோலவே வட்டம் உலகம் முழுவதிலுமே ஒரு மகத்தான சின்னமாக இருந்து வருகிறது. எல்லாவற்றையும்விட உலகம் முழுவதும் அறியப்பட்ட மற்றொரு சின்னம் ஸ்வஸ்திகம். பௌத்தர்களே இதை உலகம் முழுவதும் தங்களுடன் கொண்டு சென்று பரப்பினார்கள் என்ற  கருத்து ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் புத்த மதத்திற்கு முன்பே பல நாடுகளில் இதனைப் பயன்படுத்தியிருப்பது இப்போது தெரியவந்துள்ளது. பழங்கால பாபிலோனிலும் எகிப்திலும் இந்தச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து என்ன தெரிகிறது? இந்தச் சின்னங்கள் மனிதனின் கற்பனையில் ஒரு குறிப்பிட்ட முறையில் உதித்தவையாக இருக்க முடியாது. நிச்சயமாக ஏதோ காரணம் இருந்திருக்க வேண்டும். அந்தச் சின்னங்களுக்கும் மனித மனத்திற்கும் ஏதோ இயல்பான தொடர்பு இருந்திருக்க வேண்டும்.

Sign in to Google to save your progress. Learn more
Name  *
WhatsApp number  *
ஒரு மதத்தின் மூன்று பிரிவுகளும் எவை?  *
மூன்று பிரிவுகளில் முக்கியமான சாரம் எது?  *
கற்பனைப் பாத்திரங்களான மாமனிதர்களின் வாழ்க்கை, கதைகள், உவமைகள் போன்ற அற்புதமான விஷயங்கள் மூலம் விளக்கி விவரிப்பது எது? 
தத்துவக் கருத்துக்களுக்கு, எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் தெளிவான வடிவம் கொடுப்பது
*
சடங்குகளின் மற்றைய பெயர்  *
ஏன் சடங்குகள் முக்கியமானவை?  *
நாம் சிந்திப்பதற்கு முதற்கட்டம் அவசியமனது *
சொற்கள் என்பவை எதன் சின்னங்கள் *
சின்னங்களின் உருவாக்கம் மனிதனின் வெறும் கண்டுபிடிப்பல்ல. ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த சிலர் ஒன்றாக அமர்ந்து தங்கள் மனத்துள் சிந்தித்து வெளிக்கொண்டு வந்தவையல்ல இவை. மதச் சின்னங்கள் இயல்பாகத் தோன்றி வளர்ந்தவை. இந்தக்கூற்று 
*
கிருஸ்தவ சிலுவைச் சின்னங்களை பயன்படுத்திய வேறு இனக்குழுக்கள் எவை *
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy