புலமை வழிகாட்டி - நிகழ்நிலைப் பரீட்சை 05
5ஆம் தர புலமைபரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு ஆசிரியர் எம்.ஆர்.எம்.ரனீஸ் அவர்களினால் நடாத்தப்படும் நிகழ்நிலைப் பரீட்சை.

இவ்வினாப்பத்திரம் 20 நுண்ணறிவு வினாக்களைக் கொண்டது.


To Join in our Zoom Class Contact 071332033, 0777557434
Sign in to Google to save your progress. Learn more
School *
1. நான்கு சனிக்கிழமைகள் வருகின்ற மார்ச் மாதமொன்றின் சனிக்கிழமைகளின் திகதிகளின் கூட்டுத் தொகைக்கு இருக்கத்தக்க ஆகக் குறைந்த கூட்டுத்தொகை யாது?     *
5 points
Name *
2. சாதாரண வருடமொன்றின் ஜனவரி முதலாம் நாள் வெள்ளிக்கிழமை எனின் அவ்வருடத்தின் 189ஆம் நாள் என்ன கிழமையாகும்? *
5 points
3. யானைக் கூட்டம்மொன்றிலுள்ள யானைகளின் வால்களினதும் கால்களினதும் கூட்டுத்தொகையாக  அமையக்கூடிய பெறுமானம் யாது? *
5 points
4. கமலா ஒரு மணித்தியாலயத்தில் 20 பூக்களை செய்வாள் சிப்ரா 15 நிமிடத்தில் 7 பூக்கள் செய்வாள். 3  மணித்தியாலத்தின் பின் கமலாவை விட சிப்ரா எத்தனை பூக்கள் கூடுதலாக செய்வாள்? *
5 points
5. 400 மீற்றர் நீளமான கயிரொன்று சம நீளம் வரக்கூடிய வகையில் நான்கு இடங்களில் வெட்டப்பட்டது எனின் வெட்டிய பின் ஒரு துண்டின் நீளம் யாது? *
5 points
6. ஒரு எண்ணிலுள்ள இரு இலக்கங்களையும் கூட்டும் போது வரும் விடை 7 ஆகும். அவ்வெண்ணிலுள்ள இலக்கங்களை இடம்மாற்றி எழுதும் போது அவ்விரு எண்களுக்குமிடையிலான வித்தியாசம் 27 ஆகுமெனின் அவ்விரு இலக்க எண் யாது? *
5 points
7. மின்விளக்குத் தோரணம் ஒன்றில் நீலம், பச்சை, சிவப்பு, மஞ்சள் என நான்கு வகையான மின்குமிழ்கள் தொடர் ஒழுங்கில் ஒளிர்ந்து கொண்டிருந்தன. அம்மின்விளக்குத் தோரணையில் 35 மின்குமிழ்கள் இருந்தது எனின் அங்கிருந்த பச்சை மின்குமிழ்களின் எண்ணிக்கை யாது? *
5 points
8. சைனப் ஒரு எண்ணை நினைத்து அதனுடன் 10ஐக் கூட்டி 8 கழித்து வரும் விடையை 4ஆல் வகுத்த போது விடையாக 6 கிடைத்தது. சைனப் நினைத்த எண் யாது? *
5 points
9. ஒரு வட்டத்தின் ஒழுங்கில் சம இடைவெளிவிட்டு 18 பச்சை நிறக் கொடிகள் நடப்பட்டன. அதன் பின்னர் சமஇடைவெளிகளின் மத்தியில் சிவப்பு நிற கொடிகள் ஒவ்வொன்றாக நடப்பட்டன. அங்கு நடப்பட்ட சிவப்பு நிறக்கொடிகளின் எண்ணிக்கை யாது? *
5 points
10. ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களில் 28 பேர் கரப்பந்தையும், 24 பேர் வலைப்பந்தையும், 9 பேர் கரப்பந்தையும் வலைப்பந்தையும் விரும்புகின்றனர் எனின் அவ்வகுப்பிலுள்ள பிள்ளைகளின் எண்ணிக்கை யாது? *
5 points
11. 85 என்ற எண்ணை விட பெரிய எண்ணையும் 85 என்ற எண்ணை விட சிறிய எண்ணையும் கூட்டி இரண்டால் வகுத்தால் வரும் விடையும் 85ஆகும். எனின் அவ்விரு எண்களும் எவை? *
5 points
12. நிமலாவின் தற்போதைய வயது 23 ஆகும். நிமலாவின் பாட்டியின் வயது 62 வருடங்களாகும். அதன்படி நிமலா பிறக்கும் போது பாட்டியின் வயது, *
5 points
13. சமஇடைவெளியில் 7 மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளன. முதலாவது மின் கம்பத்திற்கும் கடைசி மின்கம்பத்திற்குமிடையிலான தூரம் 180 மீற்றர் ஆகுமெனின் இரு கம்பங்களுக்கிடையிலான தூரம் யாது? *
5 points
14. 2019ஆம் ஆண்டு உரித்தாகும் நூற்றாண்டும் தசாப்தமும் *
5 points
15. நிமலிடம் உள்ள பணத்தை விட ரூ.18 குறைவாக விமலிடம் உள்ளது. விமலை விட ரூ.8 குறைவாக அஜித்திடம் உள்ளது. விமலிடம் ரூ. 38 இருப்பின் மூவரிடமும் காணப்பட்ட மொத்தப் பணம் யாது?   *
5 points
16. 50 தொடக்கம் 60 வரையுள்ள எண்ணும் எண்களை எழுதும்போது இலக்கம் 5 எழுதப்படும் தடவைகளின் எண்ணிக்கை யாது? *
5 points
17. புதுவருடத்திற்கு சில நண்பர்கள் தமக்கிடையே வாழ்த்தட்டைகளைப் பரிமாறிக் கொண்டனர். அவர்களிடேயே பரிமாறப்பட்ட வாழ்த்தட்டைகள் 56 எனின் அங்கு வாழ்த்தட்டைகளை பரிமாறிக் கொண்ட நண்பர்கள் எத்தனை பேர்?     *
5 points
18. பெட்டியொன்றிலுள்ள தோடம்பழங்கள், ஒரு குவியலில் 4 தோடம்பழங்கள் வீதம் இருக்குமாறு பிரிக்கப்பட்டுள்ளது. இறுதி குவியலை அமைக்கும் போது ஓரு தோடம்பழம் குறைவாக இருந்தது. அதன்படி பெட்டியிலிருந்த தோடம்பழங்களின் எண்ணிக்கையாக இருக்கக்கூடியது. *
5 points
19. 2020ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தின் நடுவில் வரும் திகதி *
5 points
20. 85239 என்ற எண்களை குறியீடாக பயன்படுத்தி அமைகக் கூடிய சொல் *
5 points
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy