8மணி இலவச தேர்வு தொகுப்பு-அளவியல்(9th -10th)
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
ஒரு முக்கோண வடிவ நிலத்தின் பக்கங்கள் முறையே 22 மீட்டர் 120 மீட்டர் மற்றும் 122 மீட்டர் எனில் பயலின் பரப்பளவை கணக்கிடுக. மேலும் பயலைச் சமப்படுத்த ஒரு சதுர மீட்டருக்கு 20 செலவாகும் எனில் வயலை சமப்படுத்த ஆகும் மொத்த செலவு ரூ ____________  ஆகும். *
1 point
ஒரு முக்கோண வடிவிலான மனையின் சுற்றளவு 600 மீட்டர்.  அதன் பக்கங்கள் 5:12:13 என்ற விகிதத்தில் உள்ளன எனில் அந்த மனையின் பரப்பளவு   _____________ ச. மீ ஆகும். *
1 point
படத்தில் நிழலிடப்படாத பகுதியின் பரப்பளவு _____________ ச. மீ ஆகும்.  *
1 point
Captionless Image
ஓர் இணைகரத்தின் அடுத்தடுத்த பக்கங்களின் 34 மீ, 20 மீ  மற்றும் அதன் ஒரு மூலைவிட்டத்தின் அளவு 42 cm எனில் அந்த இணைகரத்தின் பரப்பு   ________  ச. மீ ஆகும். *
1 point
ஒரு கனச் செவ்வக வடிவப் பெட்டியின் அளவானது 6m*400cm*1.5m ஆகும். அப்பெட்டியின் வெளிப்புறம் முழுவதும் வண்ணம் பூசுவதற்கு ஒரு சதுர மீட்டருக்கு 22 வீதம் ஆகும் மொத்த செலவு  ரூ ______________  ஆகும். *
1 point
ஒரு சாக்லேட் பெட்டியின் நீளம் அகலம் மற்றும் உயரம் முறையே 5:4:3  என்ற விகிதத்தில் உள்ளது. அதன் கன அளவு 7500 கன சென்டிமீட்டர் எனில் அதன் உயரத்தின்   அளவு _____________ cm ஆகும். *
1 point
ஒரு குளத்தின் நீளம், அகலம் மற்றும் ஆழம் முறையே 20.5 m, 16m  மற்றும் 8 m ஏனில் அந்த குளத்தின் கொள்ளளவு (லிட்டரில் ) *
1 point
ஒரு கனசதுர வடிவிலான பால் தொட்டியானது  1,25,000 லிட்டர் கொள்ளளவை கொண்டுள்ளது. எனில் அத்தொட்டியின் பக்க நீளம்    *
1 point
ஒரு செங்கலின் அளவுகள்  24 cm x 12 cm x  8 cm ஆகும்.
20 மீட்டர் நீளம் 48 சென்டிமீட்டர் அகலம் மற்றும் 6 மீட்டர் உயரம் உள்ள ஒரு சுவர் எழுப்புவதற்கு இதுபோன்று எத்தனை செங்கல்கள் தேவை?
*
1 point
ஒரு தீப்பெட்டியின் அளவுகள் 6 cm x 3.5 cm x  2.5 cm என உள்ளது.  இதே அளவுடைய 12 தீப்பெட்டிகள் கொண்ட ஒரு கட்டின் கன அளவு __________  க. செ. மீ ஆகும். *
1 point
இனிப்புகள் வைக்கும் ஒரு பெட்டியானது 22cm  x  18 cm x 10 cm என்ற அளவில் உள்ளது. இதனை  1 m x 88cm x 63 cm அளவுள்ள ஓர் அட்டைப்பெட்டியில் எத்தனை அடுக்கலாம்?  *
1 point
ஒரு கன செவ்வகத்தின் நீளம் அகலம் மற்றும் உயரம் முறையே 120 மில்லி மீட்டர், 10 சென்டிமீட்டர் மற்றும் 8 சென்டிமீட்டர் இதே அளவு கொண்ட 10 கன செவ்வகங்களின் கன அளவு  ________   க. செ. மீ  *
1 point
ஒரு மீன் தொட்டி ஆனது   3.8 m x 2.5 m x 1.6 m என்ற அளவுகளை  உடையது. இந்த தொட்டியானது எத்தனை லிட்டர் தண்ணீர் கொள்ளும்?  *
1 point
உலோகத்தால் ஆன ஒரு கனசதுரத்தின் பக்க அளவு 12 சென்டிமீட்டர்.  அதனை உருக்கி 18 cm நீளம் மற்றும் 16 சென்டிமீட்டர் அகலம் உள்ள கனசெவ்வகம் உருவாக்கப்படுகிறது,  எனில் அந்த கன செவ்வகத்தின் உயரம் _________  *
1 point
ஒரு மேஜை விளக்கின் வெளிப்புறத்திற்கு மட்டும் வர்ணம் பூசப்படுகிறது.ஒரு சதுர செண்டிமீட்டர் வர்ணம் பூச ரூ 2 செலவாகும் எனில் விளக்கிற்கு வர்ணம் பூசுவதற்கு ஆகும் மொத்த செலவு  *
1 point
Captionless Image
.சீனு வீட்டின் மேல்நிலை நீர்த்தொட்டி உருளை வடிவில் உள்ளது. அதன் ஆரம் 60 செ.மீ மற்றும் உயரம் 105 செ.மீ. 2 மீ 1.50 1 மீ பரிமாணங்களை உடைய ஒரு கனச்செவ்வகக் கீழ்நிலை நீர் தொட்டியிலிருந்து நீர் உந்தப்பட்டு மேலேயுள்ள உருளை வடிவத் தொட்டி முழுமையாக நிரப்பப்படுகிறது. தொடக்கத்தில் கீழ்த் தொட்டியில் நீர் முழுமையாக இருப்பதாகக் கருதுக. மேல் தொட்டிக்கு நீர் ஏற்றிய பிறகு மீதமுள்ள நீரின் கனஅளவைக் காண்க. *
1 point
6 செ.மீ ஆரமுள்ள ஒரு திண்ம கோளம் உருக்கப்பட்டு சீரான தடிமன் உள்ள ஓர் உள்ளீடற்ற உருளையாக மாற்றப்படுகிறது. உருளையின் வெளி ஆரம் 5 செ.மீ  மற்றும் உயரம் 32 செ.மீ எனில், உருளையின் தடிமனை காண்க. *
1 point
ஓர் அரைக்கோள வடிவ கிண்ணத்தின் விளிம்பு வரையில் பழச்சாறு நிரம்பியுள்ளது. உயரத்தை விட 50 சதவீதம் அதிக ஆரம் கொண்ட உருளை வடிவ பாத்திரத்திற்கு பழச்சாறு மாற்றப்படுகிறது. அரைக்கோளம் மற்றும் உருளை ஆகியவற்றின் விட்டங்கள் சமமானால் கிண்ணத்தில் இருந்து எவ்வளவு சதவீத பழச்சாறு ஊருளை வடிவ பாத்திரத்துக்கு மாற்றப்படும்? *
1 point
ஒரு மருந்து குப்பி, ஓர் உருளையின் இருபுறமும் அரைக்கோளம் இணைந்த வடிவில் உள்ளது. குப்பியின் மொத்த நீளம் 12மி.மீ மற்றும் விட்டம் 3 மி.மீ எனில், அதில் அடைக்கப்படும் மருந்தின் கன அளவை காண்க. *
1 point
ஓர் அரைக்கோளத்தின் மேல் ஓர் உள்ளிடற்ற உருளையை பொருத்திய வடிவத்தில் அமைந்த ஒரு கிண்ணத்தின் விட்டம் 14 செ.மீ மற்றும் உயரம் 13 செ.மீ எனில் அதன் கொள்ளளவை காண்க. *
1 point
ஒரு கோளம், உருளை மற்றும் கூம்பு ஆகியவற்றின் ஆரங்கள் சமம். அவை படத்தில் உள்ளபடி கூம்பு மற்றும் உருளையின் உயரங்கள் ஆரத்திற்கு சமம் எனில் அவற்றின் வளைபரப்புகளின் விகிதம்  *
1 point
Captionless Image
உயரம் 16 செ.மீ உடைய ஒரு கூம்பின் இடைக்கண்ட வடிவில் அமைந்த கொள்கலன் ஒன்றின் மேற்புறம் சிறந்த நிலையில் உள்ளது. கீழ்புற ஆரம்  8 செ.மீ மற்றும் மேற்புற ஆரம் 20 செ.மீ கொண்ட கொள்கலனில் முழுமையாக பால் நிரப்பப்படுகிறது .ஒரு லிட்டர் பாலின் விலை₹40 எனில் ,நிரப்பப்படும் பாலின் மொத்த விலையை காண்க. *
1 point
சம ஆரங்கள் கொண்ட இருகூம்புகளின் கன அளவுகள் 3600 க.செ.மீ மற்றும் 5040 க.செ.மீ எனில், உயரங்களின் விகிதம் காண்க. *
1 point
விட்டம் 20 செ.மீ உள்ள ஓர் உருளை வடிவ கண்ணாடி குவளையில் 9 செ.மீ உயரத்திற்கு நீர் உள்ளது .ஆரம் 5 செ.மீ மற்றும் உயரம் 4 செ.மீ உடைய ஒரு சிறிய உலோக உருளை,நீரில் முழுமையாக மூழ்கும் போது ஏற்படும் நீரின் உயர்வை காண்க. *
1 point
16 செ.மீ ஆரமுள்ள ஓர் உலோக பந்து ,உருக்கப்பட்டு 2 செ.மீ ஆரமுள்ள சிறு பந்துகளாக்கப்பட்டால், எத்தனை பந்துகள் கிடைக்கும்? *
1 point
அருள் தனது குடும்ப விழாவிற்கு 150 நபர்கள் தங்குவதற்கு ஒரு கூடாரம் அமைக்கிறார். கூடாரத்தின் அடிப்பகுதி உருளை வடிவிலும் மேற்பகுதி கூம்பு வடிவிலும் உள்ளது .ஒருவர் தங்குவதற்கு 4 ச.மீ அடிப்பகுதி பரப்பும் 40 க.மீ காற்றும் தேவைப்படுகிறது. கூடாரத்தில் உருளையின் உயரம் 8 மீ எனில், கூம்பின் உயரம் காண்க. *
1 point
ஒரு திண்ம அரைக்கோளத்தின் கன அளவு 29106 க.செ.மீ மூன்றில் இரண்டு பங்கு கன அளவுள்ள மற்றொரு அரைக்கோளம் இதிலிருந்து செதுக்கப்படும் ஆனால் புதிய அரைக்கோளத்தின் ஆரம் என்ன? *
1 point
ஒரு கோளவடிவ வளிக்கூண்டினுள் காற்று உந்தப்படும் போது அதன் ஆரம் 12செ.மீ லிருந்து 16 செ.மீஆக உயர்கிறது .இரு புறப்பரப்புகளின் விகிதம் காண்க *
1 point
கித்தானைக் கொண்டு 7 மீ ஆரமும் 24 மீ உயரமும் உடைய ஒரு கூம்பு வடிவ கூடாரம் உருவாக்கப்படுகிறது .செவ்வக வடிவ கித்தானின்அகலம் 4 மீ எனில் ,அதன் நீளம் காண்க *
1 point
704 ச.செ.மீ மொத்த புறப்பரப்பு கொண்ட ஒரு கூம்பின் ஆரம் 7 செ.மீ எனில் ,அதன் சாயுயரம் காண்க *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy