சங்கக் கூடம் - சங்க இலக்கிய உரையாடல் களம்
சங்கக் கூடம்
“தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்”
- பாரதி

2500 ஆண்டுகளுக்கு முன், அதாவது நம்மிடமிருந்து 100 தலைமுறைகளுக்குமுன் தமிழில் எழுதப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்ட இலக்கியம் சங்க இலக்கியம். இவை அகம் புறம் என்று இருவகைகளாகப் பகுக்கப்பட்டிருக்கின்றன. தமிழருடைய, ஏன் உலகின், மிகச் சிறந்த சொத்து இந்த இலக்கியம் என்று சொல்லலாம். அப்படிப்பட்ட சங்க இலக்கியத்தைப் பற்றி அறிந்துகொள்வது,  கற்பது, இலக்கிய அறிவு பெறுவது, சங்கச் சமூகத்தை, வரலாற்றைத் தெரிந்துகொள்வது இவை தமிழ் அறிஞர்களின் ஈடுபாடு என்று அவர்களிடம் மட்டுமே விட்டு விட்டோம். இது சரிதானா? நிச்சயமாக இல்லை என்கிறது “சங்கக் கூடம்”.

சங்க இலக்கியம் நம் தமிழ் மொழியே போல் நமது மிக ஆழமான, அழகான, உறுதியான அடையாளங்களுள் ஒன்று. அந்த அடையாளத்தை நாம் அணிந்துகொள்ளும் பொருட்டு, அறிந்துகொள்ளும் பொருட்டு, அறிய வைக்கும் பொருட்டு இதுவரை யாரும் செய்திராத முயற்சியாக ஹெரிடேஜ் இன்ஸ்பையர்டும் சப்பான் தமிழ்ச் சங்கமும் இணைந்து இணைய வழியே சங்க இலக்கிய வகுப்புகளை நடத்த இருக்கிறோம்.

தொல்காப்பியம் தொடங்கி நம் கைக்குக் கிடைத்திருக்கும் (கிடைக்காமல் அழிந்துபட்டவை மிகப் பல) எட்டுத்தொகையிலும் (தொகுக்கப்பட்ட தொகை நூல்கள்) பத்துப்பாட்டிலும் (நீண்ட பாட்டு நூல்கள்) வாழ்க்கையின் அக அழகும், சோகமும் புறச் சிக்கலும் விவேகமும் புதைந்து கிடக்கின்றன. மண்ணைத்தோண்டி பொன் எடுப்பதேபோல், சங்க இலக்கியத்தைத் தோண்டி நமக்குக் கிடைப்பவற்றை எடுத்துக்கொள்வோம்.

வகுப்பு முறைமை:
ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே வகுப்புகள் இருக்கும். 2 ஞாயிற்றுக் கிழமைகளில் அக இலக்கியமும், 2 ஞாயிற்றுக் கிழமைகளில் புற இலக்கியமும் எடுத்துக்கொள்ளப் படும். ஒருமணி நேரம் பாடம் அடுத்த 30 நிமிடங்கள் கேள்வி-பதில் என்ற விகிதத்தில் வகுப்புகள் நடக்கும். இந்த வகுப்பு நேரம் மாலை 7 மணி (JST).

எல்லா வகுப்புகளும் ஒலி-ஒளி (video) பதிவு செய்யப்படும். இந்தப்பதிவின் இணைப்பு (link) எல்லா மாணவர்களிடமும் பகிரப்படும். இந்த இணைப்பு கூடத்து மாணவர்களின் பயன்பாட்டுக்கு மட்டுமே.  இதை வெளியிலுள்ளவர்களுக்குப் பகிர்தல் முற்றிலுமாகத் தவிர்க்கப்படவேண்டும்.  இது மிக முக்கியமான வேண்டுகோள்.

நன்றி.

நமது கற்றல் இங்கே தொடங்குகிறது. சங்கக் கூடம் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது.

■வயது வரம்பு – 16 வயதுக்கு மேற்பட்டவர்கள்

■வகுப்பு நேரம்
ஞாயிற்றுக்கிழமை (வாரம் ஒருமுறை)
 இந்திய நேரம் மாலை 3.30 மணி / சப்பான் நேரம் மாலை 7 மணி (JST)

■கட்டண விவரம்:

சப்பான் - 2000 yen per month
மற்ற நாடுகளை சேர்ந்தோருக்கு தங்கள் பகுதியின் தமிழ் சங்கத்தின் மூலமாகவோ அல்லது இந்திய வங்கி கணக்கின் மூலமாக (1200 ரூபாய் / மாதம்) பெறப்படும்.

மாதந்தோறும் வகுப்புகளுக்கான கட்டணம் - மாத தொடக்கத்தில் பெறப்படும்


■கீழே கேட்கப்பட்டிருக்கும் முழு விவரங்ளைப் பதிவிடுங்கள்.

மிக்க நன்றி

சப்பான் தமிழ் சங்கம்
மற்றும்
Heritage Inspired

Email *
பெயர் *
வசிக்கும் இடம் *
வசிக்கும் நாடு *
வயது *
Whatsapp no *
Are you a teacher by profession - Yes / No *
In case of specific discounts in course fee ( Please add your comments below in open field )(Example 50% Fee etc. we will consider )
Next
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy