தேசிய மாணவர் படை
Sign in to Google to save your progress. Learn more
Untitled Title
தேசிய மாணவர் படை(ஆங்கிலம்:N.C.C.= national cadet corps,இந்தி:राष्ट्रीय कैडेट कोर), இந்தியாவில் ஏப்ரல் 16, 1948-ஆம் வருடம் தொடங்கப் பெற்றது. Unity and Discipline(एकता और अनुशासन) என்பதே இதன் குறிக்கோளுரையாகும்.இந்தியாவில் 30 இலட்சம் பேர் தேசிய மாணவர் படையில் உள்ளனர். தமிழ‌த்‌தி‌ல் தேசிய மாணவர் படையில் ஒரு லட்சம் பேர் உள்ளனர்.மேலும் இந்த எண்ணிக்கையை வருடாவருடம் அதிகரிக்க நடவடி‌க்கை எடு‌க்க‌ப்ப‌டுகிறது.1965ஆண்டிலும், 1971ஆண்டிலும் நடந்த இந்திய பாகிசுத்தான் போரில், இரண்டாம் வரிசை அணியினராக தேசியப்படை மாணவர் நின்றது, வரலாற்று புகழ் வாய்ந்த நிகழ்வாகும்.


---------------------------------------------------------------------------------------------------------------------------------
தோற்றம்
1942 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசு உருவாக்கிய பல்கலைக் கழக அதிகாரிகள் பயிற்சிப் படை (University Officers Training Corps (UOTC)) என்பதே, இந்தியச் சட்டப்படி தேசிய மாணவர் படை ஆனதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இந்திய தேசிய மாணவர் படைச் சட்டம் XXXI, 1948 இதன் தோற்றத்திற்குக் காரணமாக அமைந்தது.[1] இதன் கீழ் மூன்று பெரும்பிரிவுகள் அமைந்துள்ளன. இம்மூன்றுமே தேசிய மாணவர் படையினர் என்றே அழைக்கப்படுகின்றனர்.ஆடவர்களுக்கு மட்டுமே அமைந்திருந்த இந்த பிாிவில் தற்பாேது பெண்களும் சேர்க்கப்படுகின்றனர்.

தரைப்படை அணி
வான்படை அணி
கடற்படை அணி
முகாம்கள்
---------------------------------------------------------------------------------------------------------------------------------
தேசிய மாணவர் படை (இந்தியா) இளைஞர் பரிமாற்ற நிரல் (Youth Exchange Programme)

தலைமைப் பண்பிற்கான முகாம்கள் (Leadership Camp)
வாயு சைனிக் முகாம் (Vayu Sainic Camp)
நவ் சைனிக் முகாம் (Nau Sainik Camp)
பாறையேற்ற முகாம்கள் (Trekking Camp)
மலையேற்ற முகாம்கள் (Mountaineering Camp)
தேசிய ஒற்றுமைக்கான முகாம்கள் (National Integration Camp)
தள் சைனிக் முகாம் (Tal Sainik Camp)
படை ஒருங்கிணைவு முகாம் (Army Attachment Camp)
கடற்படை ஒருங்கிணைவு முகாம் (Naval Attachment Camp)
வான்படை ஒருங்கிணைவு முகாம் (Airforce Attachment Camp)
குடியரசு நாளுக்கான முகாம் (Republic Day Camp)
வருடாந்திர பயிற்சி முகாம் (Annual Training Camp)
கூட்டு வருடாந்திர பயிற்சி முகாம் (Combained Annual Training Camp)
---------------------------------------------------------------------------------------------------------------------------------
உறுதிமொழி
இந்தியச் சட்ட முறையில் அறிவிக்கப்பட்ட, ஆங்கில உறுதிமொழி[2] வருமாறு;-

WE THE CADET OF THE NATIONAL CADET CORPS, DO SOLOEMNLY PLEDGE THAT WE SHALL ALWAYS UPHOLD THE UNITY OF INDIA.

WE RESOLVE TO BE DISCIPLINED AND RESPONSIBLE CITIZEN OF OUR NATION.

WE SHALL UNDERTAKE POSITIVE COMMUNITY SERVICE IN THE SPIRIT OF SELFLESSNESS AND CONCERN FOR OUR FELLOW BEINGS.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
செயற்பாடுகள்


பள்‌ளி‌ப் பருவ‌த்‌திலும், கல்லூரிப் பருவத்திலும் சமூக‌த்‌தி‌ன் ‌மீது அ‌க்கறை செலு‌த்து‌ம் ‌வித‌த்‌தி‌ல், இளவயதினரை வ‌ழிநட‌த்த, எ‌ன்‌சி‌சி எனப்படும் தேசிய மாணவர் படை அமைக்கப் பட்டுள்ளது. இராணுவ‌த்‌திலும், காவ‌ல் துறையிலும் சேர்ந்து பணியாற்ற விரும்பும் மாணவர்களுக்கு படிப்பு காலத்திலேயே அதற்கேற்ற பயிற்சியை என்சிசி அளிக்கக் கூடியது.

தேசிய மாணவர் படையில் உள்ள மாணவர்களின் திறனை வளர்க்கும் வகையில் அவர்களுக்கு தனி ஆளுமைத் திறன், பேச்சுபயிற்சி, கடற்படையில் உள்ள அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படும். அவர்களுக்கு துப்பாக்கிச் சுடுதல், தீயணைப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.வேலைவாய்ப்பு பற்றி தெரிந்து கொள்ளும் வகையிலும், வேலைவாய்ப்புக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளவும் ஒவ்வொரு தேசிய மாணவர் படை பிரிவு அலுவலகத்திலும், வேலைவாய்ப்பு வழிகாட்டி பிரிவு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.


Ncc
தேசிய மாணவர் படை தினம் - நவம்பர் 24
Untitled Question
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy