28. அமெரிக்காவின் பெரிய அளவிலான
முதல் கனரக எஃகு உற்பத்தி ஆண்ட்ரூ
கார்னேகி என்பவரால் தொடங்கப்பட்டது.
இரும்பு க்கா ன மூ ல ப்பொ ருட்களை
வழங்கிய சுரங்கங்கள், உற்பத்தி ஆலைகள், இறுதித் தயாரிப்பான இரும்புத்தகடுகளை உருவாக்கும் வெப்ப உலைகள், உற்பத்திப் பொருள்களை எடுத்துச்செல்லும்
இரயில்பாதைகள், கப்பல் போக்குவரத்து
என ஒவ்வொன்றையும் விலைக்கு வாங்கி,
எஃகு உற்பத்தியின் ஒவ்வொரு கட்டத்தையும்
தனது ஆதிக்கத்தின் கீழ்க்கொண்டுவந்தார்.