புலமை வழிகாட்டி நிகழ்நிலைப் பரீட்சை - 06
 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு ஆசிரியர் எம்.ஆர்.எம்.ரனீஸ் அவர்களினால் நடாத்தப்படும் நிகழ்நிலைப் பரீட்சை - 06.

இவ்வினாப்பத்திரம் 20 நுண்ணறிவு வினாக்களைக் கொண்டது.

To Join in our Zoom Class Contact 071 3320333, 0777557434
Sign in to Google to save your progress. Learn more
Name *
School *
1. ஒரு வருடத்தின் 250ஆவது நாள் புதன்கிழமையாகும் எனின் அவ்வருடத்தின் 150ஆவது நாள் என்ன கிழமையாகும்? *
5 points
2. குமார் தனது வீட்டிலிருந்து வடக்கு நோக்கிச் சென்று வலது கைப்பக்கம் திரும்பி சிறிது தூரம் சென்று மீண்டும் வலது கைப்பக்கம் திரும்பிச் சிறிது தூரம் சென்று இறுதியில் இடது கைப்பக்கமாக சென்று கொண்டிருந்தான். அவன் தற்பொழுது செல்லும் திசை யாது? *
5 points
3. 1  மீற்றர்  நீளமான அளவு நாடாவொன்றின் 15 சென்றிமீற்றர் நீளமான பழுதடைந்துள்ளதால் அப்பகுதியை வெட்டி நீக்கிவிட்டு எஞ்சிய இரு பகுதிளும் 5 சென்றிமீற்றர் ஒன்றன் மீது ஒன்று வைக்கப்பட்டு ஒட்டப்பட்டது எனின் அளவு நாடாவின் தற்போதைய நீளம் யாது? *
5 points
4. 1 தொடக்கம் 20 வரையுள்ள இரட்டை எண்களின் கூட்டுத் தொகை யாது? *
5 points
5. 60 தொடக்கம் 70 வரையுள்ள எண்ணும் எண்களை எழுதும் போது எழுதப்படும் இலக்கங்களின் எண்ணிக்கை யாது?
5 points
Clear selection
6. பெட்டியொன்றில் சிவப்பு, நீலம், மஞ்சள் ஆகிய நிறங்களிலான பூக்கள் இரண்டு வீதம் உள்ளன. அதன்படி, கண்களை மூடிக் கொண்டு கட்டாயமாக சிவப்பு நிறப் பூவொன்றை எடுப்பதற்கு எடுக்க வேண்டிய மிகக் குறைந்த பூக்களின் எண்ணிக்கை யாது? *
5 points
7. பெட்டியொன்றில் 9 பந்துகள் உள்ளன. பிள்ளையொன்று 5 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு பந்து வீதம் பெட்டியிலிருந்து வெளியே எடுத்தது. அதன்படி அப்பிள்ளைக்குச் சகல பந்துகளையும் பெட்டியிலிருந்து வெளியே எடுப்பதற்கு எடுத்த நேரம் யாது? *
5 points
8. கமலாவினதும் விமலாவினதும் நிறைகளின் கூட்டுத்தொகை 55 ஆகும். கமலா விமலாவை விட 9 கிலோகிராம் குறைந்தவள் எனின் விமலாவின் நிறை யாது?
5 points
Clear selection
9. மெழுகுவர்த்தியொன்று 3 மணித்தியாலங்கள் ஒளிர்கின்றது. மெழுகுவர்த்தி ஒன்றைக் கொழுத்தி 1 மணித்தியாலங்களுக்குப் பின்னர் வேறொரு மெழுகுவர்த்தி கொளுத்தப்படுகின்றது. இவ்வாறு 3 மெழுகுவர்த்திகள் ஒளிரும் காலம் எத்தனை மணித்தியாலங்கள்? *
5 points
10. நாற்பத்திரண்டாயிரத்து முந்நூற்று இருபத்தொன்பது எனும் எண்ணில் நூறாமிடத்து இலக்கத்தையும் ஒன்றாமிடத்து இலக்கத்தையும் இடம் மாற்றி எழுதும் போது கிடைக்கும் எண் யாது? *
5 points
11. நீளம், அகலம், உயரம் 10 சென்றிமீற்றராகவுள்ள மரச்சதுரமுகியிலிருந்து நீளம், அகலம், உயரம் 2 சென்றிமீற்றர்  வீதமுள்ள எத்தனை சிறிய சதுரமுகிகள் வெட்டலாம்? *
5 points
12. 2020 ஜனவரி 01ஆம் திகதி புதன்கிழமையாகும். அவ்வாண்டிலுள்ள நாட்களை இரண்டாக பிரித்து வேறுபடுத்தும் போது முதல் கட்டத்தின் இறுதி நாள் முகுந்தனின் பிறந்த தினமாகும் எனின் முகுந்தன் பிறந்த மாதமும் திகதியும் யாது? *
5 points
13. அக்ஸாவிடம் சில பந்துகள் உள்ளன. அவற்றுள் 2ஐ தவிர்த்து எஞ்சியவை சிவப்பு நிறம், 2ஐ தவிர்த்து எஞ்சியவை பச்சை நிறம். 2ஐ தவிர்த்து எஞ்சியவை மஞ்சள் நிறம். அக்ஸாவிடம் உள்ள பந்துகள் எத்தனை? *
5 points
14. பாதையொன்றின் இரு மருங்கிலும் சம இடைவெளியில் சம எண்ணிக்கையில் கம்பங்கள் நடப்பட்டு இரு கம்பங்களுக்கிடையில் 9கொடிகள் வீதம் தொங்கவிடத் தீர்மானிக்கப்பட்டது. அங்கு மொத்தமாக 22 கம்பங்கள் நடப்பட்டால் தேவைப்படும் கொடிகளின் எண்ணிக்கை யாது? *
5 points
15. ஒரு நிரையில் சிவப்பு நிறக்கொடிக்கு வலதுபக்கம் நீல நிறக்கொடியும் மஞ்சள் நிறக்கொடிக்கு  வலதுபக்கம் சிவப்பு நிறக்கொடியும் காணப்பட்டன. இதற்கேற்ப நடுவில் உள்ள கொடியின்  நிறம்  யாது?     *
5 points
16. சீதா உட்பட 26 மாணவர்கள் வட்டமாக அமர்ந்துள்ளனர். அவர்கள் எல்லோரும் சீதாவிலிருந்து முறையே 1,2,3,1,2,3 எனக் கூறியவாறு வட்டத்தைச் சுற்றி இரு தடவைகள் எண்ணுகின்றனர். இவ்வாறு முதல் சுற்றில் 1 எனிக் கூறி எண்ணும் சீதா இரண்டாம் சுற்றில் எண்ணும் போது கூறும் இலக்கம் யாது?     *
5 points
17. மாலை வேலையில் நிமல்; தனது வீட்டிலிருந்து நிமலாவின் வீட்டிற்குச் செல்லும் போது அவனது நிழல் அவனுக்கு முன்னால் விழுந்தது எனின், அவன் எத்திசையை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்?       *
5 points
18. “நான் இன்னும் கொஞ்சம் வேகமாக ஓடியிருந்தால் போட்டியில் இரண்டாவதாக வந்திருப்பேன்” என நிமல் கூறினான். அதன்படி அப்போட்டியில் நிமல் பெற்ற இடம் *
5 points
19. நூறினிடத்தினதும் பத்தினிடத்தினதும் பெறுமதிகளுக்கிடையிலான வித்தியாம் 350ஆக இருக்கும் பெறுமானம், *
5 points
20. வரிசையொன்றிலுள்ள 7 பிள்ளைகளுக்கு ஒரு தடவைக்கு ஒரு பேனை வீதம் நீலப் பேனைகளும் சிவப்பு பேனைகளும் வரிசையாக வழங்கப்படுகின்றது. அங்கு 6 சிவப்புப் பேனைகளும் 4 நீலப் பேனைகளும் வழங்கப்பட்டதெனின் நீலம், சிவப்பு ஆகிய இரு நிறப்பேனைகளும் பேனைகளும் கிடைக்கப்பெற்ற எத்தனைப் பிள்ளைகள் உள்ளன? *
5 points
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy