8 மணித்தேர்வு -  (9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 04-06) 
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
பெயர்: *
மாவட்டம்: *
1. கன்பூசியஸ் கி.மு. (பொ.ஆ.மு). ............. இல் சீனாவின் ஷான்டுங் மாகாணத்தில் பிறந்தார். அவர் வரலாறு, கவிதை, தத்துவம், இசை ஆகியவற்றைப் பயின்றார். அவர் ஐந்து முக்கியமான படைப்புகளை எழுதினார்.
1 point
Clear selection
2. குழந்தைகள் பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும், மனைவி கணவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று கன்பூசியஸ் வலியுறுத்தினாலும், ”உத்தரவு தவறென்றால், ஒரு மகன் தனது தந்தையை எதிர்க்க வேண்டும், ஓர் அமைச்சர் அரசரை எதிர்க்க
வேண்டும்” என்றும் தெளிவாக முன்மொழிந்தவர் ........................
1 point
Clear selection
3. தாவோ டே ஞிங் என்ற நூலை எழுதியவர்........
1 point
Clear selection
4. ஜோராஸ்ட்ரியனிசத்தைத்
தோற்றுவித்தவர் பாரசீகத்தைச் சேர்ந்த
.....................
1 point
Clear selection
5. ஒளிக் கடவுளான அஹுர மஸ்தா தான்
உலகின் ஒரே கடவுள் என்று பிரகடனம் செய்தவர்............
1 point
Clear selection
6. அரசு குறித்து அவரிடம் கேட்ட போது, ”ஒரு அரசிற்கு மூன்று விசயங்கள் அவசியமானவை; நாட்டில் போதுமான உணவு, போதுமான இராணுவத் தளவாடங்கள், மக்களுக்குத் தம் ஆட்சியாளர் மீது நம்பிக்கை ஆகியன இருக்க வேண்டும்” என்றவர்........................
1 point
Clear selection
7. ஜோராஸ்ட்ரியர்களின் புனித நூல் ஜென்ட் அவெஸ்தா என்பதாகும். இது பல்வேறு
காலகட்டங்களின் புனித இலக்கியங்களான
பிரார்த்தனைப் பாடல்கள், வேண்டுதல்கள்,
சட்டங்கள், புராணங்கள், புனிதக் கதைகளின்
தொகுப்பாகும்.
1 point
Clear selection
8. ஒரு மதம் அல்லது ஓர் அரசு அல்லது ஒரு
சமூகத்தின் முதன்மையான நோக்கம் ஒழுக்கத்தை வளர்த்தெடுப்பதுதான் என்று ................. போதித்தார். எண்ணம், சொல், செயல் என அனைத்திலும் புனிதமாக இருப்பதுதான் மிக உயரிய மதக் கோட்பாடாகும்.
1 point
Clear selection
9. பிராமணங்கள் என அழைக்கப்படும் சடங்குகளின் தொகுப்புகள், இசைப் பாடல் வரிகள், காடுகளில் இரகசியமாகக் கற்று அறியவேண்டிய அறிவு, சில ரிக்வேதப் பாடல்களின் விளக்கங்கள் அடங்கிய
ஆரண்யகங்களும் உபநிடதங்களும் கி.மு.
(பொ.ஆ.மு). 1000 - .......... காலகட்டத்தில் கங்கைச் சமவெளியில் தொகுக்கப்பட்டன.
1 point
Clear selection
10. வர்த்தமான மகாவீரர் வைஷாலிக்கு அருகே
உள்ள குந்தகிராமத்தில் கி.மு. (பொ.ஆ.மு). ....... இல் பிறந்தார். அவருடைய தாய் திரிசலை, லிச்சாவி இனத்தைச் சேர்ந்த இளவரசியாவார். அவர் தனது இளமைக்காலத்தை ஓர் இளவரசராகக் கழித்தார். யசோதா என்ற இளவரசியை மணந்தார்.
1 point
Clear selection
11. 30 ஆண்டுகள் போதனை செய்த பிறகு, கி.மு. (பொ.ஆ.மு). ............ இல் தமது 72வது வயதில் ராஜகிருகத்திற்கு அருகில் உள்ள பவபுரியில் மகாவீரர் காலமானார்.
1 point
Clear selection
12. மும்மணிகள் (திரிரத்னா) என்று அழைக்கபடும் சமண மதத்தின் முக்கியமான  கொள்கைகள் : நன்னம்பிக்கை, நல்லறிவு,........
1 point
Clear selection
13. கர்நாடகாவில் உள்ள சிரவண - பெலகொலாவில் உள்ள .............யின் சிலைதான் (இவர் கோமதீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்) இந்தியாவில் செதுக்கப்பட்ட மிக உயரமான (57 அடி) சமணச்
சிலை இதுவே ஆகும்.
1 point
Clear selection
14. கி.பி.(பொ.ஆ) ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் இருந்த முக்கியமான
சமயங்களில் சமணமும் ஒன்று. பல்லவ
மன்னரான மகேந்திர வர்மன் சமண சமயத்தைச் சார்ந்தவர். அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசரின் தாக்கத்தால் அவர் சைவ சமயத்துக்கு மாறினார். தற்போதைய காஞ்சி நகரத்துக்கு அருகில் சமணக் காஞ்சி அமைந்திருக்கிறது.
1 point
Clear selection
15. சித்தார்த்தர் மெய்யறிவு அடைந்த அந்த இடம் இன்றைய பீஹாரில் உள்ள புத்த கயா ஆகும். இது ‘..............‘ என்று அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
16. கனிஷ்கரின் ஆட்சிக் காலத்தில், பௌத்தத்
துறவி நாகார்ஜுனா என்பவர் பௌத்தத்தில்
ஒரு சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார்.
பௌத்தம்,  ........... பிரிவுகளாகப் பிரிந்தது.
1 point
Clear selection
17. புத்தர் கடவுளாக வழிபடப்பட்டார். போதிசத்துவர் அவருடைய முந்தைய அவதாரமாகக் கருதப்பட்டார். மஹாயானத்தைப் பின்பற்றுவோர்
புத்தர்,போதிசத்துவரின் சிலைகளை நிறுவி
அவர்களது புகழ் பாடும் மந்திரங்களைச் சொல்லி வழிபட்டனர். பின்னர் இவர்கள் தம்முடைய மத நூல்களை சமஸ்கிருதத்தில் எழுதினார்கள். ................. வகை பௌத்தத்தை கனிஷ்கர் ஆதரித்தார்.
1 point
Clear selection
18. புத்தரின் நெருக்கமான சீடராக இருந்தவர்
.......................... அவர் ஒருமுறை புத்தரிடம், ‘பெண்கள் துறவியாக முடியுமா?’ எனக்
கேட்டார். அதற்குப் புத்தர், ‘பெண்கள் உலக
இன்பங்களையும் ஆடம்பரங்களையும்
துறந்தால், அவர்களும் ஆண்களைப் போல
துறவியாக முடியும்; மெய்யறிவையும் அடைய
முடியும்’ என்றார்.
1 point
Clear selection
19. பௌத்தமும், சமணமும் தோன்றிய காலத்தில் ........ என்றொரு பிரிவும் தோன்றியது. அதைத் தோற்றுவித்தவர் மக்கலி கோசலர் (மஸ்கரிபுத்திர கோசலர்) என்பவர். இவர் மகாவீரரின் நண்பர். சிறிது காலத்திற்கு இருவரும் சேர்ந்து இருந்திருக்கிறார்கள். பின்னர் கோசலர் பிரிந்து ............... ப் பிரிவைத் தோற்றுவித்தார்.
1 point
Clear selection
20. புத்த இலக்கியங்கள் ............... மஹாஜனபதங்களைப் பட்டியலிடுகின்றன.
1 point
Clear selection
21. ரிக்வேத பட்டமான ‘ராஜன்’
என்பதற்கு பதிலாக சாம்ராட், ஏக்ராட், விராட், போஜன் போன்ற பட்டங்களை மன்னர்கள் பயன்படுத்தினர்.
1 point
Clear selection
22. ஈரானில் அசிரியப் பேரரசும் .......வில் மகதப் பேரரசும் உருவாக இரும்புக் கலப்பை சார்ந்த விவசாயம் வழிவகுத்தது.
1 point
Clear selection
23. ......... வம்சம்தான் வட இந்தியாவின் முதல் சத்திரியரல்லாத வம்சமாகும்.
1 point
Clear selection
24. சந்திரகுப்தரின் ஆட்சியின் போது,
ஆசியா மைனரிலிருந்து இந்தியா வரைக்கும்
தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த
அலெக்ஸாண்டரின் தளபதி செல்யூகஸ் நிகேடர் சிந்து நதியைத் தாண்டி இந்தியாவிற்கு படையெடுத்து வந்தபோது சந்திரகுப்தரிடம்
தோற்றுப்போனார்.
1 point
Clear selection
25. சந்திரகுப்தரின் அமைச்சரான சாணக்கியர் அர்த்தசாஸ்திரம் என்ற ........ எழுதினார். இது
மௌரிய ஆட்சி நிர்வாகம் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது.
1 point
Clear selection
26. நகர நிர்வாகத்தைப் போலவே
ராணுவத்துறையும் .............. பேர் கொண்ட
குழுவால் நிர்வகிக்கப்பட்டது. இக்குழுவில்
தலா ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட
ஆறு துணைக்குழுக்கள் இருந்தன.
1 point
Clear selection
27. மக்களாட்சி என்னும் சொல்லின் நேர்பொருள் “மக்களே ஆட்சி புரிவது” என்பதாகும். ஆனால் நடைமுறையில் மெடிக்ஸ் (metics) என்று அழைக்கப்பட்ட அடிமைகள், பெண்கள், நகரில் தங்கியிராதவர்கள் (வணிகர்கள், 
கைவினைஞர்கள்) ஆகியோர் விலக்கியே
வைக்கப்பட்டிருந்தனர்.
1 point
Clear selection
28. அலெக்ஸான்டரின் இறப்பிற்குப் பின்னர்
பண்பாடு மிக விரைவாக வளர்ந்தது.
வரலாற்று அறிஞர்கள் இதனை கி.மு.
(பொ.ஆ.மு) ....... ஹெலனிஸ்டிக் நாகரிகம்
என அழைக்கின்றனர்.
1 point
Clear selection
29. கிரேக்கர்களின் அறிவியல், கணிதம்,
தத்துவம் ஆகிய துறைகள் கிரேக்க-எகிப்திய
நகரமான அலெக்ஸாண்டிரியாவில் வளர்ச்சியின் உச்சத்தைத் தொட்டன. வடிவியல் (geometry) கணிதம் தொடர்பான அடிப்படைத் தோற்றங்களை .............. முறைப்படுத்தினார்.
1 point
Clear selection
30. ........... பூமியின் விட்டத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டார் .
1 point
Clear selection
31. ..................... முக்கோணவியலைக் (Trigonometric) கண்டுபிடித்தார்.
1 point
Clear selection
32. ஹிப்பார்கசின் கருத்துக்களை
அடிப்படையாகக் கொண்டு கோள்களும்
நட்சத்திரங்களும் எவ்வாறு நகர்கின்றன
என்பது குறித்த ஒரு மாதிரி அமைப்பை ...........
உருவாக்கினார்.
1 point
Clear selection
33. ரோம் அரசுக்கு அதிக வருவாயை அள்ளிக்
கொடுத்தது அடிமை வியாபாரமாகும். டெலாஸ்
தீவு மிகப்பெரிய அடிமைச் சந்தையாக மாறியது.
1 point
Clear selection
34. கிரேக்கத்தைக் காட்டிலும் ரோமில்தான்
அடிமைகளின் கிளர்ச்சிகள் அதிகம் நடந்தன.
ஸ்பார்டகஸின் கிளர்ச்சியே அவற்றுள் புகழ்
பெற்றதாகும். 70,000 அடிமைகள் பங்கேற்ற
அக்கிளர்ச்சி கி.மு. (பொ.ஆ.மு) 73இல்
தொடங்கியது.இப்புரட்சிரோமின்அதிகாரத்தை
அச்சங்கொள்ள வைத்தது. ஆனாலும்
இறுதியில் ஸ்பார்டகஸ் கொல்லப்பட்டு புரட்சி
ஒடுக்கப்பட்டது. ஸ்பார்ட்டகஸை பின்பற்றிய
............ புரட்சியாளர்களும் கொல்லப்பட்டனர்.
1 point
Clear selection
35. அகஸ்டஸ் அரசரான (கி.மு. (பொ.ஆ.மு)
27) வருடத்திலிருந்து தொடங் கும் காலம்
மன்னராட்சி காலம் (Principate) என அறியப்பட்டது. அகஸ்டஸ் தன்னை ............... (Imperator) என அழைத்துக் கொண்டார் .
1 point
Clear selection
36. அகஸ்டஸின் காலத்தைச் சேர்ந்த
பிரசித்திபெற்றஎழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளின் மூலம் நாட்டிற்குப் பெருமை 
சேர்த்தனர். பிளினி (மூத்தவர்) அளவில் மிகப்பெரிதான அறிவியல் கலைக் களஞ்சியத்தை எழுதிமுடித்தார்.அதை அவர்
................ வரலாறு எனஅழைத்தார்.
1 point
Clear selection
37. புனித சோபியா ஆலயம் கி.பி. ...............
நூற்றாண்டின் இடைப்பகுதியில்
கட்டப்பட்டதாகும். அக்கால ஐரோப்பாவின் மிக
நேர்த்தியான கட்டடமான இத்தேவாலயம்
அதன் புதுமையான கட்டடக்கலை
நுணுக்கங்களுக்கு பெயர் பெற்றதாகும்.
கான்ஸ்டாண்டிநோபிள் நகரை உதுமானிய
துருக்கியர் கைப்பற்றியபோது இத்தேவாலயம்
ஒரு மசூதியாக மாற்றப்பட்டது.
1 point
Clear selection
38. ரோமானியப் பேரரசு கி.பி. (பொ.ஆ) -476
இல் வீழ்ச்சியடைந்தது. கி.பி. (பொ.ஆ)-..........இல்
கான்ஸ்டாண்டிநோபிள் நகரைத் துருக்கியர்
கைப்பற்றினர்.
1 point
Clear selection
39. கி.பி (பொ.ஆ.) ........ இல் சீனா உற்பத்தி செய்த
இரும்பு 114,000 டன்னைத் தாண்டியது
(1788இல் இங்கிலாந்து 68,000 டன்னே
உற்பத்தி செய்தது), சீனா, செராமிக்
(Ceramics) ஓடுகள் மற்றும் பீங்கான் பொருட்கள் செ ய்வதிலும் தனித்திறன் பெற்று விளங்கியது.
1 point
Clear selection
40.  மகாவீரர் பிறந்த இடம் _______
1 point
Clear selection
41.  அசோகரை புத்தப்பற்றாளராக மாற்றியவர் யார்?
1 point
Clear selection
42.  மௌரியர்களின் ஆட்சி நிர்வாகம் பற்றி விரிவாக எடுத்துரைக்கும் நூல் எது?
1 point
Clear selection
43.  சீனா _____ அரச வம்சத்தால் கிபி. 589ல் ஒன்றிணைக்கப்பட்டது.
1 point
Clear selection
44.  சீனப் பெருஞ்சுவரின் மொத்த நீளம் ____ கிலோ மீட்டர் ஆகும்.
1 point
Clear selection
45.  வெடி மருந்து _____ ஆண்டிலேயே பயன்பாட்டில் இருந்தது.
1 point
Clear selection
46.  கி.பி. _____ ல் நபிகள் இயற்கை எய்தினார்.
1 point
Clear selection
47.  ஸ்பெயினைக் கைப்பற்றிய அராபிய தளபதி ______
1 point
Clear selection
48.  ஹருன்-அல் ரஷித் என்பவர் _____ ன் திறமையான அரசர்.
1 point
Clear selection
49.  ____ என்ற கிரேக்க நகர அரசு, பாரசீகர்களை இறுதிவரை எதிர்த்து நின்றது.
1 point
Clear selection
50.  கிரேக்கர்களின் மற்றொரு பெயர் _____ ஆகும்.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy