கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக ஏற்படும் இறப்புகளின் மதிப்பீடு
 
இந்த ஆய்வானது ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தால் சுகாதாரம் மற்றும் சமூகம் சார்ந்ததாக  நடத்தப்படுகின்றது (www.ird.lk).

இலங்கையில் இதுவரை 9000 க்கும் மேற்பட்ட கோவிட் -19  தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன, இது ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினையாக மாறியுள்ளது.

தொற்றுநோயியல் பிரிவின் தரவுகளின்படி, இதுவரை வீட்டில் இறந்த மொத்த கோவிட்-19னால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1094 ஆகும். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் 493 கோவிட் -19  இறப்புகள் நிகழ்ந்துள்ளன.

இந்த கணக்கெடுப்பின் நோக்கம் இந்த பிரச்சனை தொடர்பான கூடுதல் தகவல்களை ஆராய்வதாகும்.

கோவிட் -19  காரணமாக இறந்த யாராவது உங்களுக்குத் தெரிந்தால் இந்த கணக்கெடுப்பில் நீங்கள் பங்களிக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை நீங்கள் அறிந்திருந்தால், தயவுசெய்து அவர்களின் விபரங்களை தனித்தனியாக பதிவுசெய்து கொள்ளுங்கள்.

கோவிட் -19  காரணமாக தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு நேரடி நன்மைகள் இல்லை என்றாலும், தவிர்க்கக்கூடிய இறப்புகளைக் குறைக்க இந்த கணக்கெடுப்பில் நீங்கள் வழங்கும் தகவல்கள் மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கும்.

நீங்கள் வழங்கிய தரவு இந்த கணக்கெடுப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் மற்றும் உங்கள் அடையாளம் தொடர்பான இரகசிய தன்மை பேணப்படும்.

இந்த கணக்கெடுப்பின் முடிவுகள், இந்த பிரச்சினைக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க, சுகாதார அமைச்சு மற்றும் கோவிட் -19 தொற்றுநோயைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்திற்கு வழங்கப்படும்.

எனவே, நீங்கள் வழங்கும் தகவல் நாட்டிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த கணக்கெடுப்பை நிறைவு செய்ய 15-20 நிமிடங்களுக்கு மேல் ஆகாது.

நாட்டில் நிலவும் கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் போது சுகாதாரத்துறை பின்பற்றும் தற்போதைய நடைமுறைகள் மற்றும் நடைமுறைகளை மேம்படுத்த நீங்கள் வழங்கும் தகவல்கள் மிகவும் உதவியாக இருக்கும்

இந்த ஆய்வுக்கு பேராசிரியர் அதுல சுமதிபால தலைமை தாங்குகிறார் (ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் - சுகாதாரம் மற்றும் சமூகம்).

இந்த கணக்கெடுப்பு பொது சுகாதார கண்காணிப்பு பிரிவின் கீழ், தொற்றுநோய்கள், அவசரநிலைகள் மற்றும் பேரழிவுகளின் போது நடத்தப்படுவதாகும், பொது சுகாதார நடைமுறையின் திட்டமிடல், செயல்படுத்தல் மற்றும் மதிப்பீட்டிற்கு தேவையான ஆரோக்கியம் தொடர்பான தரவுகளை சேகரிக்க காரணமாக அமைவது, உலக சுகாதார ஸ்தாபனத்தால் வழங்கப்படும் வழிகாட்டிகள் மற்றும் கோட்பாட்டு அனுமதி இந்த கணக்கெடுப்பிற்கு அதன் தன்மை காரணமாக தேவைப்படாது என்பதாகும்.

இந்த கணக்கெடுப்பில் உங்கள் பெறுமதிமிக்க நேரத்தை செலவிட்டதற்கு நாங்கள் உங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகின்றோம்.

Sign in to Google to save your progress. Learn more
பங்கேற்புக்கான அனுமதி *
Next
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy