8 மணித்தேர்வு -  9 ஆம் வகுப்பு அறிவியல் (04-06) (8pm)
www.tamilmadal.com - SGT/TNPSC/TNSURB/TET
Conectează-te la Google ca să îți salvezi progresul. Află mai multe
பெயர் : *
மாவட்டம்: *
1. ஓர் அணுவிலிருந்து எலக்ட்ரான் நீக்கப்பட்டால், அவ்வணு நேர் மின்னூட்டத்தைப் பெறும்; அதுவே நேர் அயனி எனப்படும். மாறாக, ஓர் எலக்ட்ரான்
சேர்க்கப்பட்டால் அவ்வணு எதிர் மின்னூட்டத்தைப் பெறும்; அதுவே எதிர் அயனி எனப்படும்.
Șterge selecția
2. எலக்ட்ரானின் மின்னூட்டம் (e என்று
குறிப்பிடப்படும்) அடிப்படை அலகாகக் கருதப்படுகிறது. அதன் மதிப்பு 
e = ........................... 
Șterge selecția
3. 1 C மின்னூட்டத்தில் எத்தனை எலக்ட்ரான்கள்
இருக்கும்?
Șterge selecția
4. இரு புள்ளி மின்னூட்டங்களுக்கு இடையில் ஏற்படும் நிலைமின்னியல் விசை நியூட்டனின் ........... விதியின் அடிப்படையில் இயங்குகிறது.
Șterge selecția
5. மின்விசைக் கோடுகள் என்பது ஒரு ஓரலகு நேர் மின்னூட்டம் மின்புலம் ஒன்றில் நகர முற்படும் திசையில் வரையப்படும் நேர் அல்லது வளைவுக் கோடுகளாகும்.
அவை ..........................க் கோடுகளே.
Șterge selecția
6. ஒரு தனித்த நேர் மின்னூட்டத்தின் மின்
விசைக் கோடுகள் ஆரவழியில் வெளிநோக்கியும், எதிர் மின்னூட்டத்தின் மின்விசைக் கோடுகள் ஆரவழியில் உள்நோக்கியும் இருக்கும்.
Șterge selecția
7. நேர் மின்னூட்டங்களின் இயக்கம் ‘...................... மின்னோட்டம்’ என்றும் எலக்ட்ரான்களின் இயக்கம் ‘எலக்ட்ரான் மின்னோட்டம்’ என்றும் அழைக்கப்படுகின்றன.
Șterge selecția
8. 1 ஆம்பியர் = ......................
Șterge selecția
9.  கம்பியொன்றின் குறுக்குவெட்டுப் பரப்பை 25
கூலூம் அளவிலான மின்னூட்டம் 50 வினாடி
காலத்தில் கடந்து சென்றால் அதனால் விளையும் மின்னோட்டத்தின் அளவு என்ன?
Șterge selecția
10. விளக்கு ஒன்றின் வழியே பாயும் மின்னோட்டம் 0.2 A. விளக்கு ஒரு மணி நேரம் எரிந்திருந்தால், அதன் வழியே பாய்ந்த மொத்த மின்னூட்டத்தின் மதிப்பு என்ன?
Șterge selecția
11. ஒரு மின்கலத்தின் மின்னியக்கு விசை 1.5 V.
0.5 C மின்னூட்டத்தை அந்த மின்சுற்றைச் சுற்றி
அனுப்பத் தேவைப்படும் ஆற்றல் எவ்வளவு?
Șterge selecția
12. ஒரு மின் சூடேற்றியின் வழியாக 2 × 104 C
மின்னூட்டம் பாய்கிறது. 5×10^6 J அளவு
மின்னாற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது எனில், சூடேற்றியின் குறுக்கே காணப்படும் மின்னழுத்த வேறுபாட்டைக் கணக்கிடுக.
Șterge selecția
13. மின்தடையின் SI அலகு ஓம் மற்றும் அதன்
குறியீடு Ω ஆகும். ஒரு கடத்தியின் வழியாக 1
ஆம்பியர் மின்னோட்டம் பாயும் போது அதன்
முனைகளுக்கிடையிலான மின்னழுத்த
வேறுபாடு 1 வோல்ட் எனில் அந்தக் கடத்தியின்
மின்தடை .................... ஓம் ஆகும்.
Șterge selecția
14. மின்னாற்றல் மூலமானது மின்கருவிகளின் வழியாகவோ அல்லது ஒரு மின்சுற்றிலோ மின்னோட்டத்தைச் செலுத்தும் நிலையில் அதன் முனைகளுக்குக் குறுக்கே காணப்படும் மின்னழுத்தங்களின் வேறுபாடு மின்னழுத்த வேறுபாடு எனப்படும்.
Șterge selecția
15. வெப்ப விளைவு, வேதி விளைவு ஆய்வுகளை 9 V மின்னியக்கு விசை கொண்ட
மின்கலங்களைக் கொண்டுதான் செய்ய வேண்டும். ஏனெனில் 9 V மின்கலம் மின்
அதிர்ச்சியைத் ................
Șterge selecția
16. எக்காரணம் கொண்டும் வீடுகளில்
கொடுக்கப்படும் ........மாறுமின்னோட்டத்தைப்
பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு
பயன்படுத்தினால், பெரும் மின் அதிர்ச்சி ஏற்பட்டு உடல் பெருமளவில் பாதிக்கப்படக்கூடும்.
Șterge selecția
17. மாறுதிசை மின்னோட்டத்தை நேர்திசை மின்னோட்டமாக மாற்ற பயன்படும் கருவி 
.................... என்று பெயர்.
Șterge selecția
18. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வீடுகளுக்குப்
பயன்படுத்தப்படும் மாறு மின்னோட்டத்தின் மின்னழுத்தம் மற்றும் அதிர்வெண் முறையே 
.................. ஆகும்.
Șterge selecția
19. உலர்ந்த நிலையில் மனித உடலின் மின்தடை ஏறக்குறைய ............. ஓம்.
Șterge selecția
20. நம் உடலில் தண்ணீர் இருப்பதால், மின் தடையின் மதிப்பு சில நூறு ஓம் ஆகக் குறைந்து விடுகிறது. எனவே, ஒரு மனித உடல் இயல்பிலேயே மின்னோட்டத்தைக் கடத்தும் நற்கடத்தியாக உள்ளது.
Șterge selecția
21. காந்தவிசைக் கோடுகளுக்குச் செங்குத்தாக
அமைந்த ஓரலகு பரப்பைக் கடந்து செல்லும்
காந்தவிசைக்கோடுகளின் எண்ணிக்கை காந்தப்பாய அடர்த்தி என்று அழைக்கப்படும். இதன் அலகு ................ ஆகும்
Șterge selecția
22. ஒரு காந்தப்புலத்தில் காந்தப் புலத் திசையல்லாத வேறொரு திசையில் நகரும் மின்னூட்டமானது ஒரு விசையை உணர்கிறது என்பதனை ..................... என்பவர் கண்டறிந்தார் .
Șterge selecția
23. . ............ஆம் ஆண்டில், மைக்கல்
ஃபாரடே என்னும் அறிஞர் ஒரு காந்தப்புலத்தில்
வைக்கப்படும் போது மின்னோட்டம் பாயும்
கடத்தியும் விலக்கமடையும் என்பதை க்
கண்டறிந்தார்.
Șterge selecția
24. 5 A மின்னோட்டம் பாயும் 50 செ.மீ நீளமுடைய ஒரு கடத்தியானது 2 × 10^-3 T வலிமையுடைய காந்தப் புலத்திற்கு செங்குத்தாக வைக்கப் படுகிறது. கடத்தி மீது செயல் படும் விசையைக் கண்டுபிடிக்க.
Șterge selecția
25. காந்தப் புலத்திற்கு செங்குத்தாக வைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட நீளமுடைய மின்னோட்டம் பாயும் கடத்தியானது ஒரு வலுவான விசை F க்கு உட்படுகிறது. மின்னோட்டமானது நான்கு மடங்காகவும், நீளம் பாதியாகவும் மற்றும் காந்தப்புலம் மூன்று மடங்காகவும் அதிகரித்தால் விசை எவ்வாறு அமையும்?
Șterge selecția
26. மின்னோட்டம் பாயும் கம்பியைச் சுற்றி
காந்தப்புலம் உருவாகிறது என அயர்ஸ்டட்டால் நிரூபிக்கப்பட்டபோது, தலைகீழ் விளைவுகளும் முயற்சி செய்யப்பட்டன.
Șterge selecția
27. ....... ஆம் ஆண்டில், கடத்தியுடன் இணைந்த காந்தப் பாயம் மாறும்போது,கடத்தி வழியாக ஒரு மின்னியக்கு விசையை (e.m.f) உற்பத்தி செய்ய முடியும் என்பதனை விளக்கினார் மைக்கேல் ஃபாரடே. இதனை நிரூபிப்பதற்காக அவர் பரிசோதனைகளை நடத்தினார்.
Șterge selecția
28. மைக்கேல் ஃபாரடே (22 செப்டம்பர் 1791 -
25 ஆகஸ்ட் 1867) ஒரு .................... விஞ்ஞானி
ஆவார்.
Șterge selecția
29. ஒரு மின்மாற்றியின் முதன்மைச் சுருளில் 800 சுற்றுகள் உள்ளன, துணைச் சுருள் 8
சுற்றுகளைக் கொண்டுள்ளது. இது ஒரு 220 V
AC மூலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
வெளியீடு மின்னழுத்தம் என்னவாக இருக்கும்?
Șterge selecția
30. காந்தப்புலத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக ஒரு மூடிய மின் சுற்றில் தூண்டப்பட்ட மின்னோட்டத்தை உருவாக்கும் நிகழ்வு மின்காந்தத் தூண்டல் என அறியப்படுகிறது.
Șterge selecția
31. 20 செ.மீ குவிய தொலைவு கொண்ட குவியாடி ஒன்று மகிழுந்து (car) ஒன்றில் பொருத்தப்பட்டு உள்ளது. . அதிலிருந்து 6 மீ தொலைவில் இன்னொரு மகிழுந்து உள்ளது எனில், முதல் மகிழுந்தின் ஆடியிலிருந்து பார்க்கும் போது இரண்டாவது மகிழுந்து (அதன் தொலைவு) எங்கு இருக்கும்?
Șterge selecția
32. 20 செ.மீ குவிய தொலைவு கொண்ட குவியாடி ஒன்று மகிழுந்து (car) ஒன்றில் பொருத்தப்பட்டு உள்ளது. . அதிலிருந்து 6 மீ தொலைவில் இன்னொரு மகிழுந்து உள்ளது எனில், இரண்டாவது மகிழுந்து 2 மீ அகலமும் 1.6 மீ உயரமும் கொண்டது எனில், அதன் பிம்பத்தின் அளவு என்ன?
Șterge selecția
33. ................ -ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்
கலிலியோ கலிலி (1564-1642) என்ற இத்தாலிய
அறிவியலறிஞர் ஒளியின் வேகத்தைக் கணக்கிட முயன்றார்.
Șterge selecția
34. ஒலே ரோமர் என்ற டேனிய வானியலாளர்
(astronomer) ............ -இல் வியாழன் கோளின்
பன்னிரண்டு நிலவுகளில் ஒன்றை அவதானித்து அதன் மூலம் ஒளியின் திசைவேகத்தைத் தோராயமாகக் கணக்கிட்டார்.
Șterge selecția
35. ஒலே ரோமர் கணக்கீட்டின் படி ....... யின் வேகம் கிட்டத்தட்ட 2,20,000 கி.மீ/வி என அறியப்பட்டது.
Șterge selecția
36. ..........– இல் முதன்முதலாக அர்மண்ட் ஃபிஷே என்பரால் பூமியில் (நிலத்தில்) இதன் வேகம் கணக்கிடப்பட்டது.
Șterge selecția
37. வெற்றிடத்தில் ..... யின் வேகம் ஏறக்குறைய மிகச்சரியாக 3,00,000 கி.மீ/வி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
Șterge selecția
38. கடலின் அடி ஆழத்தில் ஒளி குறைந்த பகுதியில் வாழக்கூடிய சில வகையான புழுக்கள், மீன், ராட்சத சிப்பி மீன், நட்சத்திர மீன் போன்ற உயிரினங்கள் மற்ற உயிரிகளிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள மின்னுகின்ற அல்லது ஒளிரும் பண்பைப் பெற்றுள்ளன. இந்தப் பண்பிற்கு உயிரி ஒளிர்தல் என்று பெயர்.
Șterge selecția
39. காற்றில் ஒளியின் திசைவேகம் 3 × 108 மீ/வி,
கண்ணாடியில் 2 × 10^8 மீ/வி எனில்
கண்ணாடியின் ஒளிவிலகல் எண் என்ன ?
Șterge selecția
40. அடர்குறை ஊடகத்திலிருந்து (ஊடகம் 1) அடர்மிகு ஊடகத்திற்கு (ஊடகம் 2) ஒளி செல்கிறது. படுகோணம் மற்றும் விலகு கோணம் முறையே 45°, 30° எனில் முதல் ஊடகத்தைப் பொறுத்து 2-வது ஊடகத்தின் ஒளிவிலகல் எண்ணைக் கணக்கிடுக.
Șterge selecția
41. ............ வைச் சேர்ந்த நரிந்தர் கபானி என்ற இயற்பியலாளர் இழை ஒளியியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
Șterge selecția
42.  கூற்று (A) : மின்னூட்டங்களின் இயக்கமே மின்னோட்டமாகும்.
காரணம் (R) : உயர் மின்னழுத்தத்திலிருந்து தாழ் மின்னழுத்தத்திற்கு மின்னோட்டம் பாயும்.
Șterge selecția
43.  கூற்று (A) : இரு மின்னூட்டங்களுக்கிடையேயான நிலைமின்னியல் விசை நியூட்டன் மூன்றாம் விதி அடிப்படையில் இயங்குகிறது.
காரணம் (R) : ஒரு மின்னூட்டத்தின் மீது ஏற்படும் விசை வினையாகவும் இன்னொரு மின்னோட்டத்தின் மீது ஏற்படும் விசை எதிர்வினையாகவும் செயல்படுகின்றன.
Șterge selecția
44.  கூற்று (A): காந்தவிசைக்கோடுகள் மின் கம்பிக்கு அருகில் வலுவாகவும் அதைவிட்டு விலகிச்செல்லும் போது குறைவாகவும் உள்ளது.
காணரம் (R): இது கம்பியின் அருகில் நெருங்கிய காந்த விசைக் கோடுகளையும் விலகிச் செல்லச் செல்ல குறைவான காந்தவிசைக் கோடுகளையும் வரைவதன் மூலம் குறிக்கப்படுகிறது.
Șterge selecția
45.  5 செ.மீ. குவியத் தொலைவு கொண்ட குழியாடியின் வளைவு ஆரம் = ...............
Șterge selecția
46.  குழியாடியின் முன் 7 செ.மீ தொலைவில் பொருள் வைக்கப்படும்போது அதன் ஒன்றின் மும்மடங்கு உருப்பெருக்கப்பட்ட பிம்பம் கிடைக்கிறது எனில், பிம்பம் எவ்விடத்தில் கிடைக்கும்?
Șterge selecția
47.  காற்றிலிருந்து 1.5 ஒளிவிலகல் எண் கொண்ட கண்ணாடிப் பாளத்திற்கு ஒளி செல்கிறது. கண்ணாடியில் ஒளியின் வேகம் என்ன? (வெற்றிடத்தில் ஒளியின் வேகம் 3 x 10^8 மீ/வி)
Șterge selecția
48.  வளைவு ஆரத்திற்கும், குவியத் தொலைவிற்கும் இடையே உள்ள தொடர்பு ……………………………..
Șterge selecția
49.  ஒளியின் பண்புகளையும் அதன் பயன்பாடுகளையும் பற்றி ஆராயும் இயற்பியலின் ஒரு பிரிவு ஒலியியல்.
Șterge selecția
50.  நீரில் ஒளியின் வேகம் 2.25X10^8 மீ/வி, வெற்றிடத்தில் ஒளியின் வேகம் 3×10^8 மீ/வி எனில், நீரின் ஒளிவிலகல் எண்ணைக் கணக்கிடுக. 
Șterge selecția
Trimite
Golește formularul
Nu trimiteți parole prin formularele Google.
Acest conținut nu este nici creat, nici aprobat de Google. Raportează un abuz - Condiții de utilizare - Politica de confidențialitate