கணித கற்றல் வள நிலையம்
Mr.S.Kamalakaran (SLPS), Assist.Principal, SCC, Pussellawa. 0779645969
online examination - 05  
GRADE 11

 ஒரு பரீட்சார்த்தி ஒரு முறை மாத்திரமே தோற்ற முடியும்.

 வேறு தாள்களைப் பயன்படுத்தி பூரண செய்கைமுறைகளுடன் விடையளித்த பின் அவ்விடைத்தாள்களினை கோவைப்படுத்தி வைத்துக் கொள்ளவும். இறுதி விடைகளினை மாத்திரம் இங்கே சமர்ப்பியுங்கள்.

 குறு விடைகளை வழங்கும் போது அலகுகளை எழுதுவதைத் தவிர்த்து எண்களை மாத்திரம் எழுதவும். (நிகழ்நிலைப் பரீட்சைகளில் மட்டும்)

 காற்புள்ளி(comma)  இனை எண்களுக்கிடையில் இடும் போது இடைவெளி(space) விடவேண்டாம்.

பின்னங்களை எழுதும் போது "/" எனும் குறியீட்டைப் பயன்படுத்தவும்.
Email *
மாகாணம்: *
பாடசாலையின் பெயர்: *
Please enter fully name.
மாணவர் பெயர்: *
தரம்: *
01. (i). ஓர் அஞ்சல் அலுவலகத்திற்கு ஒரு நாளில் கிடைத்த கடிதங்களின் எண்ணிக்கையில் 1/3 ஆனது பதிவுக்கடிதங்களும் 5/12 ஆனது சாதாரண கடிதங்களும் ஆகும். அந்நாளில் அஞ்சல் அலுவலகத்திற்குக் கிடைத்த பதிவுக் கடிதங்களினதும் சாதாரண கடிதங்களினதும்எண்ணிக்கையைக் கடிதங்களின் மொத்த எண்ணிக்கையின் பின்னமாகக் தருக. *
2 points
(ii). எஞ்சிய கடிதங்களில் 1/6 ஆனது கடுகதிக் கடிதங்கள் ஆகும். கடுகதிக் கடிதங்களின் எண்ணிக்கையைக் கடிதங்களின் மொத்த எண்ணிக்கையின் பின்னமாக தருக. *
2 points
(iii). பதிவு, சாதாரண, கடுகதிக் கடிதங்கள் தவிர எஞ்சிய எல்லாம் வெளிநாட்டுக் கடிதங்களாக இருந்தஅதே வேளை அவவெண்ணிக்கை 500 எனின், அந்நாளில் கிடைத்த பதிவுக் கடிதங்களின்எண்ணிக்கை யாது? *
3 points
(iv). அந்நாளில் கிடைத்த சாதாரண கடிதங்களின் எண்ணிக்கைக்கும் கடுகதிக் கடிதங்களின்எண்ணிக்கைக்குமிடையே உள்ள விகிதம் a:b எனின்  a,b என்பவற்றை முறையே எழுதுக. *
3 points
02. a). (i). கட்டடம் ஒன்றின் ஆண்டுப் பெறுமானம் ரூ. 80000 என கணிப்பிடப்பட்டுள்ளது.நகர சபை அதற்காக ஒரு காலாண்டிற்கு ரூ. 3000 வரிப்பணமாக அறவிடுகின்றது. ஆண்டு வரிப்பணத்தின்சதவீதத்தைக் காண்க. *
2 points
(ii).  முழு ஆண்டுக்கான வரிப்பணத்தை ஜனவரி 31 இற்கு முன்னர் செலுத்தும்போது 10%  கழிவுகிடைக்கின்றது. அத்தேதிக்கு முன்னர் அந்த ஆண்டிற்கான வரிப்பணத்தைச் செலுத்தினால்அவருக்குக் கிடைக்கும் அனுகூலம் எத்தனை ரூபாய்? *
2 points
b). (i). ஒருவர் மொத்த வருமானமாக ரூ.1300000 இனைப் பெறுகிறார். அவர் செலுத்த வேண்டிய மொத்த வருமானவரி ரூபாயில் எவ்வளவு? *
3 points
Captionless Image
(ii). ரூ.16000 இனை மொத்த வருமானவரியாகச் செலுத்தும் ஒருவரின் மொத்த வருமானம் எத்தனை ரூபாய்? *
3 points
03. (i). ε={10 வரையான எண்ணும் எண்கள்},   P={10 வரையான முதன்மை எண்கள்},   Q={10 வரையான சதுர எண்கள்}, R={10 வரையான நேர் ஒற்றைஎண்கள்} ஆகும். n(ε) இனை எழுதுக. *
2 points
(ii). n(P∩Q) எவ்வளவு? *
2 points
(iii). Q∩R எனும் தொடையிலுள்ள மூலகங்கள் எவை? *
2 points
(iv). n(P∩R') எவ்வளவு? *
2 points
(v). X,Y என்பன அகிலத்தொடை ஒன்றின் இரு தொடைகளாகவும், n(X)=12, n(Y)=17, n(XUY)=25 எனின், n(X∩Y) இனைக் காண்க. *
2 points
04. (i). முக்கோண அரியம், கூம்புத் திண்மங்கள் தரப்பட்டுள்ளன. a=4cm ஆகும் எனின் அரியத்தின் கனவளவை ㎤ இல் தருக. *
3 points
Captionless Image
(ii). r=7cm, h=27cm எனின் கூம்பின் கனவளவை  ㎤ இல் தருக *
3 points
(iii). இவ்விரு திண்மங்களையும் உருக்கி உலோகம் வீணாகாதவாறு நீளம், அகலம், உயரம் என்பவை முறையே 5cm, 4cm, 3cm ஆகவுடைய கனவுருக் குற்றிகள் செய்யப்படுகின்றன. ஒரு கனவுருக் குற்றியின் கனவளவை  ㎤ இல் தருக *
2 points
(iv). செய்யக்கூடிய கனவுருக் குற்றிகளின் எண்ணிக்கை எவ்வளவு? *
2 points
05.  (i). கிரிக்கெட் விளையாடுவோரின் எண்ணிக்கை 30பேர் ஆகும். மொத்த மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? *
2 points
Captionless Image
(ii). மொத்த எண்ணிக்கையில் 1/3 பங்கினர் உதைபந்தாட்டத்தை விளையாடுவர். உதைபந்தாட்டத்தைக் குறிக்கும் ஆரைசிறைக் கோணம் ° இல் எவ்வளவு? *
2 points
(iii). எல்லே, கரப்பந்தாட்டம் என்பவற்றை விளையாடுவோர்களின் எண்ணிக்கைகளுக்கிடையிலான விகிதம் 3:7 ஆகும். கரப்பந்தாட்டம் குறிக்கும் ஆரைச்சிறைக் கோணம் ° இல் எவ்வளவு? *
2 points
(iv). இவர்களில் எல்லே விளையாடுவோரின் எண்ணிக்கை எவ்வளவு? *
2 points
(v). கரப்பந்தாட்டம் விளையாடுவோரில் 7பேர் எல்லே விளையாடுவதற்கு மாற்றப்பட்டனர். மாற்றப்பட்ட பின்னர் கரப்பந்தாட்டம் குறிக்கும் ஆரைச்சிறைக் கோணம் ° இல் எவ்வளவு? *
2 points
இந்த Online Exam ஆனது உங்கள் கற்ற விடயங்களை மீட்ட உதவியாக உள்ளதா? *
பல்தேர்வு வினாக்களற்ற இவ்வாறான நியம கணித பரீட்சை முறையை விரும்புகிறீர்களா? *
இவ்வினாத்தாள் கட்டமைப்பில் வேறு ஏதாவது மாற்றம் செய்யப்பட வேண்டுமா? அவ்வாறெனின் குறுகிய பதிவிடவும்.
கடந்த பரீட்சையில் பரீட்சார்த்திகளின் மாகாண வாரியான பங்குபற்றல்.
Captionless Image
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy