இரண்டாமாண்டு மனிதஉரிமைகள்
7BHIA4
 UNIT - 1
Sign in to Google to save your progress. Learn more
mail id *
name class *
மனித உரிமைகளின் பொருள் மற்றும் வரையறை

மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளை நாம் மனித உரிமைகள் என்று அழைக்கிறோம்.

சாதி, மதம், பால், இனம், நாட்டுரிமை ஆகிவற்றிற்கு அப்பால், ஒவ்வொரு தனி மனிதருக்கும் பொதிந்திருக்கக் கூடிய பிறப்புரிமைகளை, மனிதனின் சுதந்திரத்திற்கும், கண்ணியத்திற்கும், நலன்களுக்கும் அவசியமான உரிமைகளை, மனித உரிமைகள் என்று நாம் அழைக்கின்றோம். மனிதர்களுக்கு மனித உரிமைகள் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவதால் சில நேரங்களில் மனித உரிமைகளை அடிப்படை உரிமைகள் என்றும், இயற்கை உரிமைகள் என்றும், பிறப்புரிமைகள் என்றும், உள்ளார்ந்த உரிமைகள் என்றும் நாம் அழைக்கின்றோம். ஒவ்வொரு நாட்டிலும் அதற்கேற்ற, உரிய சட்டமியற்றும் வழிமுறைக்கு ஏற்ப இந்த மனித உரிமைகள் சட்ட வடிவம் பெறுகின்றது. டி.டி பாசு அவர்கள் மனித உரிமைகளை வரையறுக்கும் பொழுது "எவ்வித மறுபயனுமின்றி மனிதனாகப் பிறந்த காரணத்தினாலேயே அரசிற்கு எதிராக ஒவ்வொரு தனி நபருக்கும் இருக்கக் கூடிய குறைந்தபட்ச உரிமைகளே மனித உரிமைகள்" என்று குறிப்பிட்டுள்ளார். 1993ஆம் ஆண்டு வியன்னா நகரில் நடைப்பெற்ற மனித உரிமைகள் குறித்த உலக மாநாட்டின் பிரகடனத்தில் "மனிதனின் மதிப்பிலிருந்தும், கண்ணியத்திலிருந்தும் விளைவதே மனித உரிமைகள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் என்பது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல, அதுபோல் மனித உரிமைகள் எவராலும் வழங்கப்பட்டதுமல்ல. எனவே தான் மனித உரிமைகள் எவராலும் பறிக்கப்பட முடியாத உரிமைகள் என அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது. மனிதனாகப் பிறந்த காரணத்தினால், ஒருவனுக்கு இயற்கையிலேயே உடன் பிறந்த உரிமைகள் மனித உரிமைகள். இந்த உரிமைகள் எந்த ஒரு சமுதாயத்தினாலோ, அரசினாலோ அல்லது அரசியல் அதிகார அமைப்புகளினாலோ உருவாக்கப்பட்டதல்ல. அதனால்தான் எந்த ஒரு அரசிற்கும், அதிகார அமைப்பிற்கும் மனித உரிமைகளை மீறுவதற்கான அதிகாரம் அளிக்கப்படவில்லை.





மனித உரிமை என்பது, ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப்பெறவேண்டிய மற்றும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனிதன் என்றாலே அவன் இவைகளால் வாழ முடியாது என கருதப்படும் அடிப்படையான தேவைகளை உள்ளடக்கிய உரிமைகள் இதில் சாரும். இந்த உரிமைகளை "மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாக"[1] கருதப்படுகின்றன. இனம், சாதி, நிறம், சமயம், பால், தேசியம், வயது, உடல் உள வலு ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கும் இந்த அடிப்படை உரிமைகள், மனிதர் சுதந்திரமாக, சுமூகமாக, நலமாக வாழ அவசியமான உரிமைகளாகக் கருதப்படுகின்றன. மனித உரிமைகள் என்பதனுள் அடங்குவதாகக் கருதப்படும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுள், வாழும் உரிமை, சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமநிலை, நகர்வுச் சுதந்திரம், பண்பாட்டு உரிமை, உணவுக்கான உரிமை, கல்வி உரிமை என்பன முக்கியமானவை. மனிதனின் இன்றியமையாத தேவைகளான நீர், நிலம், காற்று. உறைவிடம், பிறப்பு மற்றும் வாழுதல் போன்றவைகளை அடிப்படையாகக்கொண்டும் அந்தந்த நாட்டின் மூலச்சட்டங்களையும் கருத்தில்கொண்டும் இந்த மனித உரிமைகள் வடிவமைக்கப்படுகின்றன.


அடிப்படை மனித உரிமைகள்

எவை அடிப்படை மனித உரிமைகள் என்பது தொடர்பாக பல்வேறு வெளிப்படுத்தல்கள் உள்ளன. அனைத்துலக மட்டத்தில் ஐக்கிய நாடுகளால் வெளியிடப்பட்ட உலக மனித உரிமைகள் சாற்றுரைகள் அடிப்படையாக பெரும்பான்மை நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த சான்றுரை குடிசார் அரசியல் உரிமைகளையும், பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் பற்றியும் எடுத்துரைக்கிறது. பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் International Covenant on Economic, Social and Cultural Rights என்ற சான்றுரையிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் உரிமைகளின் சட்டம், கனடாவின் உரிமைகள் சுதந்திரங்களுக்கான கனடிய சாசனம் போன்று பல்வேறு நாடுகளில் மனித உரிமைகளை வெளிப்படுத்தி சட்டங்கள் உள்ளன. பின்வருவன இப்படி பல வெளிப்படுத்தல்களில் அடிப்படை மனித உரிமைகளாக கருதப்படுவையாகும்.

வாழும் உரிமை
உணவுக்கான உரிமை
நீருக்கான உரிமை
கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்/பேச்சுரிமை
சிந்தனைச் சுதந்திரம்
ஊடகச் சுதந்திரம்
தகவல் சுதந்திரம்
சமயச் சுதந்திரம்
அடிமையாகா உரிமை
சித்தரவதைக்கு உட்படா உரிமை
தன்னாட்சி உரிமை/சுயநிர்ணயம்
ஆட்சியில் பங்குகொள்ள உரிமை
நேர்மையான விசாரணைக்கான உரிமை
நகர்வு சுதந்திரம்
கூடல் சுதந்திரம்
குழுமச் சுதந்திரம்
கல்வி உரிமை
மொழி உரிமை
பண்பாட்டு உரிமை
சொத்துரிமை
தனி மனித உரிமை


தோற்றம் மற்றும் வளர்ச்சி


மனித உரிமையின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகளை உள்ளடக்கியுள்ளதுடன், பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் காலம் முழுவதிலும் சமய, பண்பாட்டு, மெய்யியல், சட்டம் ஆகிய துறைகளின் வளர்ச்சிகளினால் வளம்பெற்றுள்ளது.


1215 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட "சுதந்திரத்துக்கான பெரும் பட்டயம்".
பல தொன்மையான ஆவணங்களும், பிற்காலத்தில் சமயமும், மெய்யியலும் மனித உரிமைகள் எனக் கருதப்படக்கூடிய பல்வேறு கருத்துருக்களைத் தம்முள் அடக்கியிருந்தன. இவற்றுள், கிமு 539 இல் பாரசீகப் பேரரசன் சைரஸ் என்பவனால் வெளியிடப்பட்ட நோக்கப் பிரகடனம்; கிமு 272-231 காலப்பகுதியில் இந்தியப் பேரரசனான அசோகன் வெளியிட்ட அசோகனின் ஆணை எனப்படும் ஆணையும்; கிபி 622 இல் முகமது நபியால் உருவாக்கப்பட்ட மதீனாவின் அரசியல் சட்டமும் குறிப்பிடத்தக்கவை. 1215 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரால் வெளியிடப்பட்ட "சுதந்திரத்துக்கான பெரும் பட்டயம்" (Magna Carta Libertatum) ஆங்கிலச் சட்ட வரலாற்றில் முக்கியமானது ஆகும். இதனால் இது இன்றைய அனைத்துலகச் சட்டம், அரசமைப்புச் சட்டங்கள் ஆகியவை தொடர்பிலும் மிகவும் முக்கியமானதாக உள்ளது.

ஆனாலும், நவீன மனித உரிமைச் சட்டத்தின் பெரும் பகுதியும், மனித உரிமை என்பதற்கான நவீன விளக்கங்களின் அடிப்படையும், ஒப்பீட்டளவில் அண்மைக்கால வரலாறாகும். 1525 ஆம் ஆண்டில் விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக செருமனியில் வெளியிடப்பட்ட "கருப்புக் காட்டின் பன்னிரண்டு அம்சங்கள்" (Twelve Articles of the Black Forest) என்னும் ஆவணமே ஐரோப்பாவின் முதல் மனித உரிமை தொடர்பான பதிவு எனக் கருதப்படுகின்றது. 1689 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பிரித்தானிய உரிமைகள் சட்டமூலம் என அழைக்கப்படும், "குடிமக்களின் உரிமைகள், சுதந்திரங்கள், அரசுக்கான வாரிசு உரிமை தீர்மானித்தல் ஆகியவற்றுக்கான சட்டம்", ஐக்கிய இராச்சியத்தில் பலவகையான அரசாங்க ஒடுக்குமுறைகளைச் சட்டத்துக்குப் புறம்பானவையாக ஆக்கியது.


1789 ஆகஸ்ட் 26 ஆம் தேதி பிரான்சின் தேசிய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனிதர்களுக்கும் குடிமக்களுக்குமான உரிமைகள் அறிக்கை.
18 ஆம் நூற்றாண்டில் ஐக்கிய அமெரிக்காவிலும் (1776), பிரான்சிலும் (1789) இரண்டு முக்கிய புரட்சிகள் இடம்பெற்றன. இவற்றின் விளைவாக இரண்டு அறிக்கைகள் வெளியிடபட்டன. ஒன்று ஐக்கிய அமெரிக்க விடுதலை அறிக்கை, மற்றது மனிதர்களுக்கும் குடிமக்களுக்குமான உரிமைகள் அறிக்கை. இரண்டுமே சில சட்டம் சார்ந்த உரிமைகளை நிலைநாட்டியிருந்தன. மேலும் 1776 ஆம் ஆண்டின் உரிமைகளுக்கான வெர்ஜீனியா அறிக்கையும் பல அடிப்படை உரிமைகளைச் சட்டத்தில் இடம்பெறச் செய்தது.

எல்லா மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்களைப் படைத்தவன் உயிர்வாழும் உரிமை, சுதந்திரம், மகிழ்ச்சியை நாடும் உரிமை போன்ற அவர்களிடமிருந்து பிரிக்கமுடியாத உரிமைகள் சிலவற்றை அவர்களுக்கு அளித்துள்ளான் என்னும் உண்மைகள் தாமாகவே விளக்கம் பெறுகின்றன எனக் கொள்கிறோம்.
— ஐக்கிய அமெரிக்க விடுதலைக்கான அறிக்கை, 1776
இவற்றைத் தொடர்ந்து 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில், தாமசு பைன், ஜான் இசுட்டுவார்ட் மில், ஜி டபிள்யூ. எஃப். கேகெல் போன்றோரால் மனித உரிமைகள் தொடர்பான மெய்யியல் வளர்ச்சி பெறலாயிற்று.

20 ஆம் நூற்றாண்டு முழுவதிலும் பல குழுக்களும், இயக்கங்களும் மனித உரிமையின் பெயரால் பலவகையான சமூக மாற்றங்களை ஏற்படுத்தின. மேற்கு ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் தொழிலாளர் சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யும் உரிமை, மிகக்குறைந்த வேலை நிலைமைகளை நிலைநாட்டுதல், சிறுவர்களைத் தொழிலில் ஈடுபடுத்துவதைத் தடை செய்தல் அல்லது கட்டுப்படுத்துதல் போன்ற உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. பெண்ணுரிமை இயக்கங்களால் பல நாடுகளில் பெண்களுக்கான வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. நாட்டு விடுதலை இயக்கங்கள் பல குடியேற்றவாத அரசுகளை வெளியேற்றி விடுதலை பெற்றுக்கொண்டன. இவற்றுள் மகாத்மா காந்தியின் தலைமையிலான இந்திய விடுதலைப் போராட்டம் முக்கியமானது.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழு நிறுவப்பட்டமை, 1864 ஆம் ஆண்டின் "லீபர் நெறிகள்" 1864 ஆம் ஆண்டின் முதலாம் ஜெனீவா மாநாடு என்பன அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்ததுடன் இரண்டு உலகப் போர்களுக்குப் பின்னர் அச் சட்டங்கள் மேலும் வளர்ச்சி பெற உதவின.

உலகப் போர்களும், அவற்றினால் விளைந்த உயிர்ச் சேதங்கள், மனித உரிமை மீறல்களும் தற்கால மனித உரிமைகள் தொடர்பான நடவடிக்கைகள் வளர்ச்சிபெறத் தூண்டுதலாக அமைந்தன. முதலாம் உலகப் போரின் பின்னர் உருவான வெர்சாய் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 1919 ஆம் ஆண்டில் நாடுகள் சங்கம் உருவானது. இச் சங்கம், ஆயுதக் களைவு; கூட்டுப் பாதுகாப்பு மூலம் போரைத் தவிர்த்தல்; நாடுகளிடையேயான முரண்பாடுகளை; கலந்துபேசுதல், இராசதந்திர வழிமுறைகள், உலக நலன்களை மேம்படுத்துதல் என்பவற்றின் மூலம் தீர்த்துக்கொள்ளுதல் போன்றவற்றை நோக்கங்களாகக் கொண்டிருந்தது.

இச் சங்கத்தின் பட்டயத்தில் இச் சங்கத்தினால் முன்னெடுக்கப்படவேண்டிய பல உரிமைகள் குறித்த ஆணைகள் வழங்கப்பட்டிருந்தன. இவ்வுரிமைகள் பின்னர், இன்றைய உலக மனித உரிமைகள் அறிக்கையிலும் உள்ளடக்கப்பட்டன.

1945 ஆம் ஆண்டின் யால்ட்டா மாநாட்டில், நாடுகளின் சங்கத்தின் பணிகளை முன்னெடுப்பதற்குப் புதிய அமைப்பொன்றை உருவாக்க கூட்டு வல்லரசுகள் இணங்கின. இதன் அடிப்படையிலேயே ஐக்கிய நாடுகள் அவை உருவாக்கப்பட்டது. தொடங்கப்பட்டதிலிருந்து அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் தொடர்பில் இவ்வமைப்பு பெரும் பங்கு ஆற்றியுள்ளது. உலகப் போர்களைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் அவையும் அதன் உறுப்பு நாடுகளும் ஈடுபட்ட கலந்துரையாடல்களும், உருவாக்கிய சட்ட அமைப்புக்களுமே இன்றைய அனைத்துலக மனிதாபிமானச் சட்டம், அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் என்பவற்றில் உள்ளடங்கியுள்ளன.
இயற்கை உரிமைகள்
இயற்கை மற்றும் சட்ட உரிமைகள் இரண்டு வகையான உரிமைகள். இயற்கை உரிமைகள் என்பது எந்தவொரு குறிப்பிட்ட கலாச்சாரத்தின் அல்லது அரசாங்கத்தின் சட்டங்கள் அல்லது பழக்கவழக்கங்களை சார்ந்து இல்லாதவை, எனவே அவை உலகளாவியவை மற்றும் தவிர்க்கமுடியாதவை (அவை மனித சட்டங்களால் ரத்து செய்யப்படவோ கட்டுப்படுத்தவோ முடியாது). கொடுக்கப்பட்ட சட்ட அமைப்பால் ஒரு நபருக்கு வழங்கப்படும் சட்ட உரிமைகள் (அவை மனித சட்டங்களால் மாற்றியமைக்கப்படலாம், ரத்து செய்யப்படலாம் மற்றும் கட்டுப்படுத்தப்படலாம்).
இயற்கை சட்டத்தின் கருத்து இயற்கை உரிமைகள் என்ற கருத்துடன் தொடர்புடையது. இயற்கை சட்டம் முதன்முதலில் பண்டைய கிரேக்க தத்துவத்தில் தோன்றியது, ரோமானிய தத்துவஞானி சிசரோ அவர்களால் குறிப்பிடப்பட்டார். இது பின்னர் பைபிளில் குறிப்பிடப்பட்டது, பின்னர் இடைக்காலத்தில் கத்தோலிக்க தத்துவஞானிகளான ஆல்பர்ட் தி கிரேட் மற்றும் அவரது மாணவர் தாமஸ் அக்வினாஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. அறிவொளி யுகத்தின் போது, இயற்கை சட்டங்களின் கருத்து மன்னர்களின் தெய்வீக உரிமையை சவால் செய்ய பயன்படுத்தப்பட்டது, மேலும் ஒரு சமூக ஒப்பந்தம், நேர்மறையான சட்டம் மற்றும் அரசாங்கத்தை நிறுவுவதற்கான மாற்று நியாயமாக மாறியது - இதனால் சட்ட உரிமைகள் - கிளாசிக்கல் வடிவத்தில் குடியரசுவாதம். மாறாக, இயற்கை உரிமைகள் என்ற கருத்தை மற்றவர்கள் இதுபோன்ற அனைத்து நிறுவனங்களின் நியாயத்தன்மையையும் சவால் செய்ய பயன்படுத்துகின்றனர்.
மனித உரிமைகள் பற்றிய யோசனை இயற்கை உரிமைகளுடன் நெருக்கமாக தொடர்புடையது: சிலர் இருவருக்கும் இடையில் எந்த வித்தியாசத்தையும் ஒப்புக் கொள்ளவில்லை, அவை ஒத்ததாக கருதப்படுகின்றன, மற்றவர்கள் இயற்கையான உரிமைகளுடன் பாரம்பரியமாக தொடர்புடைய சில அம்சங்களுடனான தொடர்பை அகற்றுவதற்காக விதிமுறைகளை தனித்தனியாக வைத்திருக்க தேர்வு செய்கிறார்கள். இயற்கை உரிமைகள், குறிப்பாக, எந்தவொரு அரசாங்கத்திற்கும் அல்லது சர்வதேச அமைப்பிற்கும் தள்ளுபடி செய்ய அதிகாரம் இல்லை. 1948 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உலகளாவிய பிரகடனம் என்பது இயற்கை உரிமைகள் பற்றிய ஒரு கருத்தை சர்வதேச மென்மையான சட்டத்தில் உள்ளடக்கிய ஒரு முக்கியமான சட்ட கருவியாகும். இயற்கை உரிமைகள் பாரம்பரியமாக எதிர்மறையான உரிமைகளாகக் கருதப்பட்டன, அதே நேரத்தில் மனித உரிமைகளும் நேர்மறையான உரிமைகளைக் கொண்டுள்ளன. மனித உரிமைகள் பற்றிய இயற்கையான உரிமைகள் கருத்தில் கூட, இரண்டு சொற்களும் ஒத்ததாக இருக்காது.
விலங்குகளுக்கு இயற்கையான உரிமைகள் உள்ளன என்ற கருத்து 20 ஆம் நூற்றாண்டிலும் 21 ஆம் நூற்றாண்டிலும் தத்துவவாதிகள் மற்றும் சட்ட அறிஞர்களின் ஆர்வத்தைப் பெற்றது.
லத்தீன் ஜுஸ் நேச்சுரலிஸ், ஆங்கில இயற்கை உரிமை போன்றவற்றின் மொழிபெயர்ப்பு இது அரசால் வழங்கப்பட்ட சட்டப்பூர்வ சட்ட உரிமை அல்ல, ஆனால் மாநிலத்தை நிறுவுவதற்கு முன்பு ஒரு நபர் பிறக்கும் உரிமை. இயற்கை சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிரந்தர மற்றும் முழுமையான உரிமையாக இதை மாநில அதிகாரத்தால் மீற முடியாது. ஜப்பானின் சுதந்திர பிரச்சார இயக்க காலத்தில், இது இயற்கை மனித உரிமைகள் என்று அழைக்கப்பட்டது. நவீன ஐரோப்பாவின் சமூக ஒப்பந்தக் கோட்பாட்டில் , மனிதர்கள் சமூக நிலைக்கு (ஹோப்ஸ்) நுழைவதற்கு முன்பு இது இயற்கையான நிலையில் நடைபெறுவதாகக் கூறப்பட்டது, இது குடிமக்கள் புரட்சியின் கருத்தியல் ஆயுதமாக மாறியது. சுதந்திர உரிமை, சம உரிமை, உரிமை போன்றவை அவற்றின் உள்ளடக்கங்கள், இவை மீறப்படும்போது எதிர்ப்பு உரிமை மற்றும் புரட்சிகர உரிமை ஆகியவை இயற்கை உரிமைகள் எனக் கூறப்பட்டன.



மாக்னகார்த்தா


மாக்னா கார்ட்டா (Magna Carta) அல்லது மேக்னா கார்ட்டா என்பது இங்கிலாந்து இராச்சியதின் அரசருக்கும் அந்நாட்டுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட ஓர் உடன்படிக்கையாகும். 1215 ஆம் ஆண்டு முதலில் அரசு முத்திரைத்தாளில் பதிப்பிக்கப்பட்ட இந்த மகாசாசனம் பதின்மூன்றாவது நூற்றாண்டில் சில தற்காலிக விதிகளை நீக்கி அரசரின் ஆட்சிக்கு நேரடியான எதிர்ப்புகளைத் தவிர்த்து மீளவும் பதிப்பிக்கப்பட்டது. இந்த சாசனம் 1225ஆம் ஆண்டு சட்டமாக அங்கீகரிக்கப்பட்டது. 1297 ஆம் ஆண்டு பதிப்பு இன்னமும் இங்கிலாந்து மற்றும் வேல்சு அரசமைப்புப் புத்தகங்களில் இங்கிலாந்தின் சுதந்திரங்களுக்கும் வனங்களின் சுதந்திரங்களுக்குமான பெரும் சாசனம் (The Great Charter of the Liberties of England, and of the Liberties of the Forest) என அறியப்படுகிறது.

மாக்னா கார்ட்டா பொதுமக்கள் தமது அரசரின் ஆட்சி அதிகாரங்களை குறைத்து தங்களின் சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள அரசரை வலியுறுத்தி ஏற்பட்ட முதல் சாசனமாகும். இதன் முன்னோடியாகவும் உந்துதலாகவும் 1100 ஆம் ஆண்டு ஹென்றி I தானாகவே வெளியிட்ட சுதந்திர சாசனம் அமைந்தது. மாக்னா கார்ட்டாவில் பொது மக்களுக்கு வழங்கப்படும் உரிமைகளுக்கான விதிகள் என்பது மிகவும் சொற்பமே.

இது உலக வரலாற்றிற்கு இங்கிலாந்தின் முக்கிய கொடையாக இருந்தபோதும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் பெரும்பாலான விதிகள் அவற்றின் மூலத்தை விட முற்றிலும் மாற்றப்பட்டன. மூன்று கொள்கைகள் இன்னமும் இங்கிலாந்து மற்றும் வேல்சின் சட்டங்களில் இடம் பெற்றுள்ளன. டென்னிங் பிரபு இந்த சாசனத்தை "எல்லாக் காலங்களுக்குமான மிகசிறந்த அரசமைப்பு ஆவணம்; தன்னிச்சையான சர்வாதிகார ஆட்சிக்கெதிர் தனிநபரின் சுதந்திரத்திற்கான அடிக்கல்" எனக் கூறுகிறார்.[1] உல்ஃப் பிரபு தனது 2005 பேச்சில் "தற்போது சிறப்பு அரசமைப்பு நிலையுள்ளதாக அங்கீகரிக்கப்படும் ஆவணங்களில் முதலாவதாக" இதனைக் குறிப்பிடுகிறார்.[2]

இது உள்ளடக்கம் அல்லது வடிவம் என எதிலும் தனித்துவமானதாக இல்லாதிருப்பினும், இந்தச் சாசனத்தின் மூலம் ஆங்கிலம் பேசும் உலகெங்கும் அரசமைப்பு சட்டங்களின்படி ஆட்சி நடத்த வழி வகுத்தது.[3] நடைமுறையில் மாகனா கார்ட்டா அரசரின் அதிகாரங்களை மட்டுப்படுத்தாதிருந்தபோதும் அரசரும் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர் எனக் காட்ட ஓர் குறியீடாக இருந்தது. மாக்னா கார்ட்டா அரசனின் அதிகாரத்தை பலவீனப்படுத்தும் முதலாவது வரலாற்று ஆவணமாகவும், பாராளமன்ற அதிகாரம் வளர்ச்சி பெறுவது சம்பந்தமான முக்கிய நிகழ்வாகவும் அமையப்பெற்றது. அரசனால் மேற்கொள்ளப்படும் தீர்மானம் சட்டமாகக் கருதப்படும் காலத்தில், இவ்வொப்பந்தத்தில் கையப்பமிட்டதன் மூலம் அவனும் சட்டத்திற்கு கட்டுப்படும் நிலை ஏற்பட்டது. புதிய நாடுகளில் குடியேறியவர்களுக்கு ஓர் வழிகாட்டுதலாக[4] அவர்தம் அரசமைப்பு ஆவணங்களை, அமெரிக்க அரசியலைப்பு உட்பட, உருவாக்கிட உதவியது.[5]
பயிற்சி வினாக்கள்
1. மனிதஉரிமைகள் என்றால் என்ன?

2.அடிப்படை உரிமைகள் இரண்டினை எழுதுக.

3. இயற்கை உரிமைகள் விவரி.

4.மனிதனின் இன்றியமையாத தேவைகள் எவை?


Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy