8 மணித்தேர்வு -112 (10ஆம் வகுப்பு குடிமையியல் 04-05 + பொருளியல் -01
Sign in to Google to save your progress. Learn more
பெயர்: *
மாவட்டம்: *
1. ..................... ஆம் ஆண்டு புது டெல்லியில் நிறுவப்பட்ட இந்திய வெளிநாட்டுச் சேவை பயிற்சி நிறுவனம் இந்திய வெளியுறவுச் சேவை அதிகாரிகளுக்கு (IFS) பயிற்சி அளிக்கிறது.
1 point
Clear selection
2. இந்தியா (பிரதமர் - ஜவகர்லால் நேரு)
மற்றும் சீனா (பிரதமர் - சூ-ெயன்-லாய்)
ஆகிய நாடுகளுக்கிடையே அமைதியுடன்
இணங்கியிருத்தலுக்கான 5 கொள்கைகள்
(பஞ்சசீலம்), ............. ஏப்ரல் மாதம் 28ஆம் நாள்
கையெழுத்தானது.
1 point
Clear selection
3.  பஞ்சசீலக் கொள்கைகள் இந்தோனேசியாவில் .................... ஆம் ஆண்டு நடைபெற்ற ஆப்பிரிக்க-ஆசிய மாநாட்டில் கையெழுத்தான பாண்டுங் பிரகடனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
1 point
Clear selection
4. 'அணிசேரா இயக்கம்' என்ற சொல் ............ இல்
ஐ.நா. சபையில் உரையாற்றிய வி. கிருஷ்ண
மேனன் என்பவரால் உருவாக்கப்பட்டது.
அணிசேராமை என்பது இந்திய வெளியுறவுக்
கொள்கையின் முக்கிய அம்சமாக விளங்குகிறது.
1 point
Clear selection
5. ”நாம் ஒருவரை முற்றிலும் சார்ந்தோ அல்லது தனித்தோ இருக்க முடியாது. ஆனால் இவ்வுலகில் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிறோம்” என்று கூறியவர்?
1 point
Clear selection
6. இந்திய துணைக்கண்டத்தில் கடந்த ................ ஆண்டுகளாக நிலவி வந்த ஒரே மாதிரியான பண்பாட்டின் ஒரு பகுதியாக அண்டை
நாடுகள் விளங்குகின்றன.
1 point
Clear selection
7. சீனாவும் ரஷ்யாவும் அதிக  எண்ணிக்கையிலான அண்டை நாடுகளுடன்
தனது எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.
1 point
Clear selection
8.  கங்கை நீரைப் பகிர்ந்து கொள்ள ................ இல் கையெழுத்தான பராக்கா ஒப்பந்தம் ஒரு வரலாற்று ஒப்பந்தமாகும்.
1 point
Clear selection
9. இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்கும்
பொதுவானதாக உள்ள ............. நதிகளிலிருந்து
அதிகபட்ச நலனைப் பெறுவதற்காக இரு நாட்டுக் கூட்டு நதி ஆணையம் செயல்படுகிறது.
1 point
Clear selection
10. இந்தியாவிற்குச் சொந்தமான டீன்பிகா (Teen Bigha) என்ற பகுதி மேற்கு வங்காளம் மற்றும்
வங்காளதேசத்திற்கு இடையேயான எல்லையில் உள்ளது. குறுகலான இப்பாதை .............. ஆம் ஆண்டு வங்காளதேசத்திற்குக் குத்தகைக்கு விடப்பட்டது.
1 point
Clear selection
11. ............... இமயமலையில் உள்ள ஒரு சிறிய
முடியாட்சி நாடு ஆகும். 'இடி மின்னல் நிலம்' என்று அறியப்படும் இது உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகும்.
1 point
Clear selection
12. இந்தியா மற்றும் பூடான் இடையேயான
இராஜதந்திர உறவுகள் .............. ஆம் ஆண்டில் இந்திய பிரதிநிதி ஒருவரைத் திம்புவில் நியமித்ததிலிருந்து தொடங்கியது. பூடான் நிலங்களால் சூழப்பட்ட நாடாகும்.
1 point
Clear selection
13. பூடானின் பொருளாதார மேம்பாட்டிற்கு இந்தியா முதன்மைப் பங்காற்றுகிறது. இந்தியா ’பாரத் முதல் பூடான் வரை’ (B2B) என்று அறியப்படும் இருதரப்பு வணிக உறவினை அறிவித்தது.
1 point
Clear selection
14. அணிசேரா இயக்கமானது எத்தனை உறுப்பு நாடுகளையும் 17 நாடுகளைப் பார்வையாளராகவும் 10 சர்வதேச 
நிறுவனங்களையும் கொண்டுள்ளது.? 
1 point
Clear selection
15. மக்மகான் எல்லைக் கோடு – இந்தியா, சீனா
மற்றும் பூடானின் கிழக்குப் பகுதி ஆகிய
பகுதிகளுக்கு இடையேயான எல்லைக்கோடு
ஆகும். இது .............. ஆம் ஆண்டில் பிரிட்டிஷ்
இந்தியா, திபெத் மற்றும் சீனா ஆகிய நாடுகளின்
பிரதிநிதிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
1 point
Clear selection
16. இந்திய அரசாங்கம் ’வங்காளதேசத்திற்கான உதவி’ என்ற திட்டத்தின் கீழ் கட்டடங்கள் கட்டவும், ஆய்வுக்கூடங்கள், மருந்தகங்கள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கவும் மானியம் வழங்கி உதவுகிறது.
1 point
Clear selection
17. இந்தியா தன் இரண்டாவது மிக நீளமான
எல்லையை மியான்மர் நாட்டோடு பகிர்ந்து
கொண்டுள்ளது. ............ ஆம் ஆண்டு வரை பர்மா என அறியப்பட்டது.
1 point
Clear selection
18. இந்தியா அணிசேரா இயக்கத்தில் இருந்த
போதும் சோவியத் யூனியனுடன் ............. ஆம்
ஆண்டில் இந்திய - சோவியத் ஒப்பந்தத்தின்
(20 ஆண்டு கால ஒப்பந்தமான அமைதி, நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு) மூலம் இணைந்தது.
1 point
Clear selection
19. இந்தியாவையும் காத்மண்டுவையும்
இணைப்பதற்கான....................  நீளமுள்ள
மகேந்திர ராஜ் மார்க் (Mahendra Raj Marg) என்னும்
இணைப்பை இந்தியா கட்டியுள்ளது.
1 point
Clear selection
20. ............ ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான்
பிரிவினைக்குப் பின்னர் பல்வேறு முக்கிய
விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே
வேறுபாடு காரணமாக நெருடலான உறவு இருந்து வருகிறது.
1 point
Clear selection
21. .............. ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்ட போர்
நிறுத்தக் கோடு 1972ஆம் ஆண்டிற்குப் பின்னர்
எல்லைக் கட்டுப்பாடுக் கோடு என
அழைக்கப்பட்டது.
1 point
Clear selection
22. அசோகர் புத்த மதத்தைப் பரப்புவதற்காக அவரது மகன் மகிந்தாவையும் மகள் சங்க மித்திரையையும் ................. அனுப்பினார்.
1 point
Clear selection
23. அணிசேரா இயக்கத்தின் நிறுவனத்
தலைவர்கள் இந்தியாவின் ஜவகர்லால் நேரு,
யுகோஸ்லாவியாவின் டிட்டோ, எகிப்தின் நாசர்,
இந்தோனேசியாவின் சுகர்னோ மற்றும் கானாவின் குவாமே நிக்ரூமா ஆகியோராவர்.
1 point
Clear selection
24. அமெரிக்காவும் இந்தியாவும் புதிய தலைமுறை இராணுவக் கூட்டாண்மைக்கு வழிவகுக்கும் தகவல் தொடர்பு, இணக்கத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் (Communication Compatibility and Security Agreement - COMCASA) 
கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம்
............ காலவரையறை கொண்டதாகும்.
1 point
Clear selection
25. மும்பை, அகமதாபாத் இடையேயான
அதிவேக ரயில் போக்குவரத்து (MAHSR) இருநாட்டு ஒத்துழைப்பின் மற்றுமொரு முயற்சியாகும்.
1 point
Clear selection
26. ................ ஆம் ஆண்டின் சிம்லா ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லையாகும். இக்கோடு பிரிவினை செய்யப்பட்டபோது ராட்க்ளிஃப் கோடு (RadCliffe Line) என்று அழைக்கப்பட்டது.
1 point
Clear selection
27. ................ ஆம் ஆண்டு குஜராத், கர்நாடகம்,
இராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகிய 4
மாநிலங்களில் ஜப்பான் - இந்தியா உற்பத்தி
நிறுவனம் (JIM) ஏற்படுத்தப்பட்டுள்ளது.
1 point
Clear selection
28. சீனா 1964ஆம் ஆண்டு லாப் நார் (Lop Nor) என்னுமிடத்தில் மேற்கொண்ட அணு
சோதனைக்குப் பதிலடியாக இந்தியா தனது முதல் பூமிக்கடியிலான அணு சோதனைத் திட்டத்தினை .......இல் பொக்ரா னில் நடத்தியது. (நிலத்தடி அணு வெடிப்புத் திட்டம் / Subterranean Nuclear Explosions Project).
1 point
Clear selection
29. ............... ஆம் ஆண்டு நடைபெற்ற பிரிக்ஸ்
மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளின் அமைச்சர்கள்
பணம் செலுத்தும் முறை தொடர்பான
ஆலோசனைகளைத் தொடங்கினர். இது
உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி, செய்திப் பரிமாற்ற அமைப்பிற்கு (SWIFT - Society for Worldwide Interbank Financial Telecommunication System) மாற்றாக இருக்கும்.
1 point
Clear selection
30. சோழ அரசர்களான முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம் இராஜேந்திரன் ஆகியோர் இலங்கையின் வடபகுதியைக் கைப்பற்றினர்.
1 point
Clear selection
31. பிரிக்ஸ் (BRICS) என்ற சொல் ஜிம் ஓ’ நீல் (Jim O'Neill) என்ற பிரபலமான பிரிட்டிஷ் பொருளாதார நிபுணரால் உருவாக்கப்பட்டது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ............... ஆம் ஆண்டு வாக்கில் ஆறு தொழில் மயமாக்கப்பட்ட நாடுகளைவிட டாலர் மதிப்பில் பெரிய நாடுகளாக உருவாகும்
என்றும் கடந்த 300 ஆண்டுகளின் அதிகாரப்
போக்கு முற்றிலும் மாறுபடும் என்றும் அவர்
கணித்தார்.
1 point
Clear selection
32. OPEC இலச்சினை ................ ஆம் ஆண்டில்
நடைபெற்ற ஒரு சர்வதேச வடிவமைப்புப் போட்டியின் மூலம் இச்சின்னமானது
தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆஸ்திரிய வடிவமைப்பாளர் ஸ்வோபோடா இதை வடிவமைத்து போட்டியில் வென்றார்.
1 point
Clear selection
33. ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில்
உற்பத்தி செய்யப்படுகின்ற அனைத்து பண்டங்கள் மற்றும் பணிகளின் அங்காடி மதிப்பை ................... என்கிறோம்.
1 point
Clear selection
34. உலகின் மிகப் பழமையான கடல் வர்த்தக
பாதைகளில் ஒன்று சுமேரியாவில் இருந்து
பஹ்ரைன் வழியாக மெலுக்கா என்று
அழைக்கப்பட்ட சிந்துவெளி நாகரிகம் வரை
அமைக்கப்பட்டிருந்தது.
1 point
Clear selection
35. ...................இல் முதன் முதலாக தாதாபாய் நௌரோஜி ” வறுமையும் 
பிரிட்டனுக் கொவ்வாத இந்திய ஆட்சியும்” (Poverty and Un - British Rule in India) என்ற தனது
புத்தகத்தில் தனி நபர் வருமானத்தைப் பற்றி
கூறியுள்ளார்.
1 point
Clear selection
36. ............... ஆம் ஆண்டில் சைமன் குஸ்நட் என்பவரால் GDPயின் நவீன கருத்து முதன் முதலில் உருவாக்கப்பட்டது.
1 point
Clear selection
37. இந்தியாவின் அணுக்கொள்கையின் இரண்டு
மையக் கருத்துகள்:
 முதலில் பயன்படுத்துவதில்லை
 குறைந்தபட்ச நம்பகமான தற்காப்புத் திறன்
1 point
Clear selection
38. உலகில் இந்தியா தொழில்துறையில்
................... இடத்திலும், பணிகள் துறையில் ஆறாவது இடத்திலும் உள்ளது.
1 point
Clear selection
39. மனித மேம்பாட்டுக்  குறியீடு என்பது .......... ம்
ஆண்டு பாகிஸ்தானின் முகஹப் – உல் ஹக் என்ற பொருளியல் அறிஞரால்
அறிமுகப்படுத்தப்பட்டது.
1 point
Clear selection
40. UNDPயில் வெளியிடப்பட்ட சமீபத்தில்
மனித வளர்ச்சி மதிப்பீடுகளில் இந்தியா 189
நாடுகளில் ......... வது இடத்திற்கு உயர்ந்துள்ளது
என வெளியிட்டுள்ளது.
1 point
Clear selection
41. சிந்துவெளி நாகரிக காலம் முதல் இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் பன்முகத்தன்மையையும் மிக ஆழமான நட்புறவையும் கொண்டிருந்தன.
கனிஷ்கருடைய ஆட்சியின் போது ஏராளமான
இந்திய சமய பரப்புக் குழுக்கள் சீனா, மத்திய
ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற
நாடுகளுக்குத் தங்கள் மதத்தைப் பரப்பச்
சென்றனர்.
1 point
Clear selection
42. 1990 – 2017 ன் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவின் HDI யின் மதிப்பு 0.427 லிருந்து 0.640 ஆக உயர்ந்தது. இது கிட்டத்திட்ட .......... அதிகரித்து, மில்லியன் மக்களின் வறுமையை போக்கி நாட்டின் குறிப்பிடத்தக்க குறியீடாக உள்ளது.
1 point
Clear selection
43. ‘GNH’ என்ற வார்த்தையை .............. ல் உருவாக்கியவர் ஜிகமே சிங்கயே வாங்ஹக் என்ற பூட்டான் அரசர். அவர் பம்பாய் விமான நிலையத்தில் நிதிகாலங்கள் (Financial Times) என்ற பத்திரிக்கைக்கு பிரிட்டிஷ்
பத்திரிக்கையாளரின் நேர்காணலில் GNP ஐ விட GNH மிக முக்கியம் என்றார்.
1 point
Clear selection
44. ........... ல் ஐக்கிய நாடுகள் சபை “வளர்ச்சிக்கான ஒரு முழுமையான அணுகுமுறைக்கு – மகிழ்ச்சி” என்ற
தீர்மானத்தை நிறைவேற்றியது. உறுப்பு நாடுகள் பூடானை ஒரு எடுத்துக்காட்டாக பின்பற்றி மகிழ்ச்சியையும், நல்வழியையும் மகிழ்ச்சி என அழைத்தனர். (“அடிப்படை மனித குறிக்கோள்”).
1 point
Clear selection
45. இந்தியாவிற்கும் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கும் (ASEAN) பாலமாக..........  உள்ளது. இதன் நோக்கம் ஆசியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதோடு, இந்தோ - பசிபிக் பகுதியில் நிலையான மற்றும் பல்முனை சமநிலையை உறுதிப்படுத்துவதாகும்.
1 point
Clear selection
46. GNHயின் தூண்கள் எத்தனை?
1 point
Clear selection
47. பணிகள் துறையில் நடப்பு விலையில் மொத்த மதிப்பு கூடுதல் 2018 - 19இல் ________ லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
1 point
Clear selection
48. பலுசிஸ்தான் (தற்காலத்திய பாகிஸ்தானின்
எல்லைப்புற மாகாணம்) பகுதியைச் சார்ந்த கான் அப்துல் கபார்கான் இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தின் முக்கியத் தலைவரும் இந்திய தேசிய காங்கிரசின் தீவிர ஆதரவாளரும் ஆவார்.
1 point
Clear selection
49. எத்தனை மாநிலங்கள் நேபாளத்துடன் தங்கள் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன?
1 point
Clear selection
50. புள்ளியியல் துறை அமைச்சரவையின் கீழேயுள்ள மத்திய புள்ளியியல் அமைப்பு
(CSO), GDP சம்பந்தப்பட்ட ஆவணங்களை
பாதுகாக்கிறது. தொழிற்துறையின் உற்பத்தியை ஆண்டு கணக்கெடுப்பு நடத்தி தொழில்துறை உற்பத்தி குறியீடு (IIP), நுகர்வோர் விலை குறியீடு (CPI) போன்ற குறியீடுகளை வெளியிடுகிறது.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report