JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
NMMS - MAT - ON LINE TEST - TAMIL MEDIUM DATE : 10/10/2021
தலைப்பு : திசைகள்
தயாரிப்பு
மு. கலைவாணி, பட்டதாரி ஆசிரியை, கணிதம்.
ஊ. ஒ. ந. நி பள்ளி, துரிஞ்சாபுரம்.
திருவண்ணாமலை மாவட்டம்.
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
மாணவர் பெயர்:
*
Your answer
பள்ளியின் பெயர்:
*
Your answer
மாவட்டத்தின் பெயர்:
*
Your answer
1. ஒரு மனிதன் அவரது வீட்டிலிருந்து வடதிசை நோக்கி 30மீ தூரம் நடந்தார். அதன் பின்னர் வலது பக்கமாக 45° கோணத்தில் திரும்புகிறார் எனில், அவர் நடந்து கொண்டிருக்கும் திசை:
*
1 point
தென்கிழக்கு
வடகிழக்கு
வடமேற்கு
தென்மேற்கு
2. மிதிவண்டியில் வடதிசையில் சென்று கொண்டிருக்கும் ஒரு சிறுவன் இடது பக்கம் திரும்பி 1 கி மீ சென்று பின்னர் மறுபடியும் இடதுபக்கம் திரும்பி 2 கி மீ செல்கிறான். அந்த சிறுவன் தற்போது தொடங்கும் இடத்திலிருந்து மேற்கில் 1 கிமீ தூரத்தில் இருப்பதாக அறிகிறான் எனில், வட திசையில் சிறுவன் பயணித்த தூரம்:
*
1 point
3 கி மீ
1 கிமீ
2 கி மீ
4 கி மீ
3. X - க்கு தென்மேற்கு திசையில் 25 மீ தூரத்தில் Y என்பவரும், Y - க்கு தென்கிழக்கில் 25 மீ தூரத்தில் Z என்பவரும் உள்ளார் எனில், X லிருந்து Z-ன் திசை என்ன?
*
1 point
கிழக்கு
மேற்கு
தெற்கு
வடக்கு
4. ஒரு கடிகாரத்தில் 4:30 மணி என காட்டுகிறது. நிமிடமுள் கிழக்கு திசையில் இருந்தால், மணிமுள் எத்திசையில் நிற்கும்.
*
1 point
வடகிழக்கு
தென்கிழக்கு
வடமேற்கு
வடக்கு
5. சூரிய உதயத்திற்கு பின் ஒரு காலை வேளையில் வாணி ஒரு கம்பத்தினை நோக்கி நின்று கொண்டிருக்கிறாள். கம்பத்தின் நிழல் சரியாக அவளுடைய வலதுபக்கத்தில் விழுகிறது எனில், அவள் நோக்கும் திசை:
*
1 point
வடக்கு
தெற்கு
கிழக்கு
மேற்கு
6.தென்கிழக்கு என்பது வகிழக்காகவும், வடகிழக்கு என்பது வமேற்காகவும், கொண்டால், வடமேற்கு என்பது
*
1 point
வடகிழக்கு
தென்மேற்கு
தென்கிழக்கு
வடமெற்கு
7. ஒரு மனிதன் வடக்கு திசை நோக்கி நின்று கொண்டிருக்கிறார். கடிகார திசையில் 45° கோணம் திரும்பி பின் கடிகார எதிர்திசையில் 180° கோணம் திரும்பி நிற்கிறார் எனில், அவர் தற்போது எத்திசையை நோக்கி நிற்கிறார்?
*
1 point
வகிழக்கு
தென்கிழக்கு
தென்மேற்கு
வடமேற்கு
8. படத்தில் கேள்விக்குறி குறிப்பிடும் திசை எது
*
1 point
தெற்கு
வமேற்கு
தெமேற்கு
மேற்கு
9. வடக்கு நோக்கி நிற்கும் ஒரு பெண் கடிகார முள் சுற்றும் திசைக்கு எதிர் திசையில் 120° திரும்புகிறாள் எனில், தற்போது அவள் எத்திசையை நோக்கி இருப்பாள்?
*
1 point
தென்கிழக்கு
வடகிழக்கு
வடமேற்கு
தெமேற்கு
10. ஒருவர் 3 கி மீ வடக்கு நோக்கி நடந்து, பின் இடதுபக்கமாக திரும்பி 2 கி மீ நடக்கிறார். மறுபடியும் இடதுபுறமாக திரும்பி 3 கி மீ நடக்கிறார். அதே சமயம் அவருடைய வலது பக்கமாக திரும்பி 3 கி மீ நடக்கிறார் எனில் அவர் ஆரம்பித்த இடத்திலிருந்து எவ்வளவு கிமீ தொலைவில் இருக்கிறார்?
*
1 point
5 கி மீ
2 கி மீ
3 கிமீ
1 கிமீ
11. கிழக்கு திசையை நோக்கி இருக்கும் ஒரு நபர் கடிகார முள் இயங்கும் திசைக்கு எதிர் திசையில் 90° திரும்புகிறார். மீண்டும் 90° கடிகார முள் இயங்கும் திசையில் திரும்பி, பின் அது இயங்கும் திசைக்கு எதிர் திசையில் 180° திரும்புகிறார் எனில் அவர் தற்போது நோக்கி இருக்கும் திசை
*
1 point
கிழக்கு
மேற்கு
வடக்கு
தெற்கு
12. ஒரு சிறுவன் தெற்கு நோக்கி 12 கிமீ நடந்துA - ஐ அடைகிறான். பின் அங்கிருந்து வடக்கு நோக்கி 8 கிமீ நடந்து B- ஐ அடைகிறான். அதைத் தொடர்ந்து மேற்கு 3 கிமீ நடந்து C - ஐ அடைகிறான் எனில், ஆரம்பநிலையிலிருந்து C-க்கு உள்ள தொலைவு
*
1 point
23 கிமீ
11 கிமீ
20 கிமீ
5 கிமீ
13. நான் எனது வீட்டிலிருந்து கிழக்கு நோக்கி 10மீ தூரம் நடந்து, பிறகு வடக்கு நோக்கி திரும்பி 15மீ தூரம் நடந்து மேற்கு நோக்கி திரும்பி 10மீ நடக்கிறேன் எனில் தற்போது என் வீட்டிலிருந்து நான் எவ்வளவு தூரத்தில் இருப்பேன் ?
*
1 point
35மீ
5மீ
15மீ
25மீ
14. ஒருவர் தலைகீழாக நின்று யோகா செய்யும் போது அவரது முகம் மேற்கு நோக்கி அமைகிறது. அவரது இடது கை நோக்கும் திசை
*
1 point
தெற்கு
வடக்கு
கிழக்கு
வடகிழக்கு
15. ஒரு கடிகாரத்தில் மணி 3 - ஐ குறிக்கிறது என்க. அதன் மணி முள் வடக்கு திசையை குறித்தால் நிமிட முள் உணர்த்தும் திசை என்ன?
*
1 point
கிழக்கு
மேற்கு
வகிழக்கு
தென்மேற்கு
16. ஒருவர் காலையில் சூரிய உதயத்திற்கு பிறகு ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி நிற்கும் போது அவரது நிழல் அவருக்கு வலப்புறம் தோன்றுகிறது எனில் அவர் எந்த திசை நோக்கி நிற்கிறார்?
*
1 point
தெற்கு
வடக்கு
கிழக்கு
மேற்கு
17. ரவியின் வீடு ராமனின் வீட்டிற்கு வலப்புறத்தில் 20மீ தொலைவில் ஒரே மாதிரியாக வடக்கு முகமாக உள்ளது. கார்த்திக் வீடு ராமன் வீட்டிற்கு வடகிழக்காக 25 மீ தொலைவில் உள்ளது எனில் கார்த்திக் வீட்டிற்கு ரவியின் வீடு எந்த திசையில் உள்ளது?
*
1 point
கிழக்கு
மேற்கு
தெற்கு
வடக்கு
18. நான் ஒரு பூங்காவின் மையத்தில் நின்று கொண்டிருந்தேன். நான் கிழக்குத் திசையை நோக்கி நிற்கிறேன். சுரேஷ் தென்மேற்கு திசையை நோக்கியும், அதே வேளையில் முக்கேஷ் வடமேற்கு திசையை நோக்கியும், ராஜா வடகிழக்கு திசையை நோக்கியும் நிற்கின்றனர். நாங்கள் ஒவ்வொருவரும் 90° அளவில் கடிகார திசையில் திரும்புகிறோம் எனில் தற்போது நான் நோக்கி இருக்கும் திசை?
*
1 point
தெற்கு
தென்கிழக்கு
தெமேற்கு
மேற்கு
Other:
19. ரவி என்பவர் A என்ற இடத்திலிருந்து சைக்கிளில் புறப்பட்டு 10 கிமீ தெற்கு நோக்கி செல்கிறார். பிறகு வலப்புறம் திரும்பி 5 கிமீ சென்று பின் மீண்டும் வலப்புறம் திரும்பி 10 கிமீ செல்கிறார். பின்பு வலப்புறம் திரும்பி 5 கிமீ தூரம் சென்று B என்ற இடத்தை அடைகிறார் எனில் A - க்கும் B - க்கும் இடைப்பட்ட தூரம் எவ்வளவு?
*
1 point
15 கிமீ
30 கிமீ
25 கிமீ
0 கிமீ
20.ஒரு எலி தெற்கு நோக்கி 20 முறை ஓடுகிறது. பின்பு வலப்புறம் திரும்பி 10 முறை ஓடுகிறது. பின்பு வலப்புறம் திரும்பி 9 முறை ஓடுகிறது. பின்பு இடதுபுறம் திரும்பி 5 முறை ஓடுகிறது. பின்பு இடதுபுறம் திரும்பி 12 முறை ஓடுகிறது. பின்பு இறுதியாக இடதுபுறம் திரும்பி 6 முறை ஓடுகிறது எனில் தற்போது எலி நோக்கி இருக்கும் திசை?
*
1 point
கிழக்கு
மேற்கு
வடக்கு
தெற்கு
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms
Help and feedback
Help Forms improve
Report