கணித கற்றல் வள நிலையம்
Mr.S.Kamalakaran (SLPS), Assist.Principal, SCC, Pussellawa. 0779645969
online examination - 05  
GRADE 10

 ஒரு பரீட்சார்த்தி ஒரு முறை மாத்திரமே தோற்ற முடியும்.

 வேறு தாள்களைப் பயன்படுத்தி பூரண செய்கைமுறைகளுடன் விடையளித்த பின் அவ்விடைத்தாள்களினை கோவைப்படுத்தி வைத்துக் கொள்ளவும். இறுதி விடைகளினை மாத்திரம் இங்கே சமர்ப்பியுங்கள்.

 குறு விடைகளை வழங்கும் போது அலகுகளை எழுதுவதைத் தவிர்த்து எண்களை மாத்திரம் எழுதவும். (நிகழ்நிலைப் பரீட்சைகளில் மட்டும்)

 காற்புள்ளி(comma)  இனை எண்களுக்கிடையில் இடும் போது இடைவெளி(space) விடவேண்டாம்.

பின்னங்களை எழுதும் போது "/" எனும் குறியீட்டைப் பயன்படுத்தவும்.
Sign in to Google to save your progress. Learn more
மாகாணம்: *
பாடசாலையின் பெயர்: *
Please enter fully name.
மாணவர் பெயர்: *
தரம்: *
01. (i). தாங்கி ஒன்றில் நிரம்பியுள்ள நீரில் 1/5 ஆனது முதல் நாளிலும் 1/3 ஈனது இரண்டாம நாளிலும் பயன்படுத்தப்பட்டது. முதல் இரண்டு நாட்களிலும் பயன்படுத்தப்பட்டது தாங்கியின் கொள்ளளவின் என்ன பின்னம்? *
2 points
(ii). மீதியாவுள்ள நீரில் 3/7 ஆனது மூன்றாம் நாள் பயன்படுத்தப்பட்டது. மூன்றாம் நாள் பயன்படுத்தியது மொத்தத்தின் என்ன பின்னம்? *
3 points
(iii). தாங்கியில்,  இறுதியில் எஞ்சியுள்ள நீரின் அளவு 1200 லீற்றர் எனின், தாங்கியின் கொள்ளவை லீற்றரில் காண்க. *
3 points
(iv). இரண்டாம் நாளில் பயன்படுத்திய நீரின் அளவை லீற்றரில் காண்க. *
2 points
02. a).  (i). ஒருவர் 15% வருட எளியவட்டிக்கு 4 வருடங்களுக்கு கடன் பெற்று, 4 வருடங்களின் பின் ரூ.48000 இனை தொகையாகச் செலுத்தி கடனிலிருந்து விடுபட்டார். அவர் கடன்பெற்ற பணம் எவ்வளவு? *
3 points
(ii). மொத்த வட்டி எவ்வளவு? *
2 points
b). (i). வியாபாரி ஒருவர் ரூ.12000 இற்கு வானொலிப்பெட்டி ஒன்றை வாங்கி அதற்கு 20% இலாபத்தில் விலைகுறித்தார். குறித்தவிலை  ரூபாயில் எவ்வளவு? *
2 points
(ii). விற்பனையின் போது 8 % கழிவு கொடுக்கப்படுகிறது. விற்பனை விலை ரூபாயில் எவ்வளவு? *
3 points
03. (i).  உருவில் ABCD ஆனது ஒரு விளையாட்டு மைதானம் ஆகும். அதில் மையக் கோணம் 45° ஆகவுள்ளஆரைச்சிறைப் பகுதி BEC இல் மணல் பரப்பப்பட்டுள்ளது. பகுதி ABED இன் சுற்றளவை m இல் காண்க. *
3 points
Captionless Image
(ii). மணல் பரப்பிய பகுதியின் பரப்பளவை ㎡ இல் காண்க. *
2 points
(iii). மணல் பரப்பிய பகுதி தவிர எஞ்சிய பகுதியின் பரப்பளவை ㎡ இல் காண்க. *
3 points
(iv). அம்மைதானத்தில் ஒரு பாற்சாலைக்காக இடத்தை ஒதுக்க வேண்டியுள்ளது. அதன் பரப்பளவு மணல்பரப்பப்பட்ட பகுதி தவிர எஞ்சிய பரப்பளவில் 1 /6 ஆக இருக்க வேண்டிய அதே வேளை ஓர் எல்லை AD ஆகவும் உள்ள செவ்வகமாகும். அதன் அகலம் கிட்டிய மீற்றரில் எவ்வளவு? *
2 points
04. (i). வியாபாரி ஒருவரால் வாகனமொன்றில் ஏற்றப்பட்ட மரக்கறி பொதியிடப்பட்ட சாக்குகளின் எண்ணிக்கை தொடர்பான தரவு தரப்பட்டுள்ளது. சாக்குகளின் மொத்த எண்ணிக்கை எத்தனை? *
2 points
Captionless Image
(ii). நடுப்பெறுமான நிரலில் இடைவெளியில் அமைய வேண்டிய எண் எது? *
2 points
(iii). fx நிரலில் இடைவெளியில் அமைய வேண்டிய இரு எண்களை  முறையே எழுதுக. *
2 points
(iv). எல்லா மரக்கறிச் சாக்குகளினதும் மொத்தநிறை எத்தனை kg? *
2 points
(v). எல்லா மரக்கறிச் சாக்குகளினதும் இடைநிறை எத்தனை kg? *
2 points
05. (i). காட்டப்பட்டவாறாக பம்பரம் ஒன்று சுழலவிடப்பட்டு தரையைத் தொடும் பக்கத்திற்கான எண் அவதானிக்கப்படுகின்றது? n(s) எவ்வளவு? *
2 points
Captionless Image
(ii).  இரட்டைஎண் பெறப்படும் நிகழ்தகவு என்ன? *
2 points
(iii). முதன்மைஎண் பெறப்படும் நிகழ்தகவு என்ன? *
2 points
(iv). சதுரஎண் பெறப்படும் நிகழ்தகவு என்ன? *
2 points
(v). முக்கோணஎண் பெறப்படும் நிகழ்தகவு என்ன? *
2 points
கடந்த பரீட்சையில் பரீட்சார்த்திகளின் மாகாண வாரியான பங்குபற்றல்.
Captionless Image
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy